புஷ்பா படம் பற்றி புதிதாக சொல்லவே தேவையில்லை, ஏனெனில் அந்த அளவிற்கு இப்படத்தின் பாடல்களும், டயலாக்குகளும் இன்றளவும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.  அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் வெளியான இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடி இருந்தார்.  இந்த படத்தை பார்க்க போனவர்களை விட சமந்தாவின் நடனத்தை பார்க்க சென்றவர்கள் தான் ஏராளம்.  சமந்தா ஆடிய 'ஊ சொல்றியா மாமா' பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.  இந்த பாடலுக்கு ஏராளமானோர் ரீல்ஸ் செய்து ட்ரெண்டாக்கினர்.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | 'ஸ்ரீவல்லி' பாடலுக்கு டான்ஸ் ஆடிய சவுரவ் கங்குலி!


இந்த பாடலுக்கு ஆண்கள் தரப்பிலிருந்து சில எதிர்ப்புகள் கிளம்பினாலும், பெரும்பாலான ஆண்கள் தான் இந்த பாடலை ரசித்தனர் என்பது நிதர்சனம்.  இந்த படம் வணிக ரீதியில் வெற்றி பெற்றதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.  முதல் பாகம் போலவே இந்த பாகத்திலும் ஒரு சோலோ பாடல் உள்ளது என்று கூறப்படுகிறது.  இந்த பாடலில் நடிகை சமந்தா நடனமாட மறுத்துவிட்ட நிலையில்  புஷ்பா-2ல் நடனமாட போவது யார் என்கிற எதிர்பார்ப்பு பெருகியது.  தற்போது இறுதியாக படக்குழு  நடனமாட வேறொரு நடிகையை தேர்வு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  



சமந்தாவிற்கு பதிலாக இப்படத்தில் திஷா பதானி ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது, இவரும் திரையுலகில் ஒரு பிரபலமான முகமாக அறியப்படுபவர்,  புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் சமந்தாவை படக்குழு ஒப்பந்தம்  செய்வதற்கு முன்னர் படக்குழு திஷா பதானியை அணுகியதாகவும், ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவரால் நடனமாட முடியாமல் போனது என்றும் சில தகவல்கள் தெரிவிக்கிறது.  திஷா பதானியை தவிர வேறு யாராலும் இதற்கு சிறப்பாக இருக்கமாட்டார்கள் என்று திரை வட்டாரங்களில் பேசப்படுகிறது.  சுகுமார் இயக்கம் புஷ்பா-2 படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


மேலும் படிக்க | RRR படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியது இந்த நிறுவனமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR