பிரம்மாண்ட திரைப்படமான பாகுபலி படத்தின் வெற்றிக்கு பின்னர் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்து தற்போது எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் திரையரங்கில் மார்ச்-25ம் தேதி வெளியாகியுள்ள திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அலியா பட் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோர் நடித்துள்ளனர். சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்று கதையை ரசிகர்களுக்கு கமர்ஷியலாக இப்படம் கொடுத்துள்ளது, இப்படத்தின் காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் நினைத்தது போல் அவர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்திருக்கிறது.
மேலும் படிக்க | ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர், ராம் சரணுக்கு வெற்றி மகுடம் சூட்டியதா?- RRR விமர்சனம்
இந்நிலையில் இப்படத்தை ஓடிடியிலும் கண்டு மகிழ ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். தற்போது திரையுலகில் ஓடிடி என்பது அத்தியாவசியமான தளமாக மாறியுள்ளது. சிலர் படங்களை நேரடியாக ஓடிடியிலும் வெளியிடுகின்றனர், சிலர் திரையரங்குகளில் படத்தை வெளியிட்ட பின்னர் ஏதேனும் ஒரு ஓடிடி தளத்தில் வெளியிடுகின்றனர். அந்த வகையில் தற்போது ஆர்ஆர்ஆர் படம் எந்த ஓடிடி தளத்தில், எந்த தேதியில் வெளியாகும் என்கிற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.
எஸ்.எஸ்.ராஜமௌலியின் இந்த பிரம்மாண்ட படைப்பு நிச்சயம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட வாய்ப்பே இல்லை. இந்த தளத்தில் கடந்த 24ம் தேதி 'பீம்லா நாயக்' படம் வெளியாகியுள்ளது. அடுத்ததாக 'ஆர்ஆர்ஆர்' படம் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகுமா என்று கேட்டால் அதுவும் இல்லை என்றுதான் சொல்லமுடியும். இந்தியாவின் மிகப்பெரிய ஓடிடி தளங்களில் அமேசான் ப்ரைம் வீடியோ தளமும் ஒன்றாகும், இருப்பினும் இந்த பிரம்மாண்ட படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை இந்த இயங்குதளம் பெறவில்லை, அதனால் இப்படம் இதில் வெளியாகாது. இந்த படம் வேறு எந்த ஓடிடி தளத்தில் தான் வெளியாகும் என்றால், இது நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது. இருப்பினும் இதன் அதிகாரபூர்வ வெளியீட்டு தேதி குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை. மேலும் இப்படம் 90 நாட்கள் திரையரங்குகளில் ஓடுவதற்கு முன்பு நெட்ப்ளிக்ஸில் வெளியிடப்படாது என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | பிரம்மாண்டத்தின் புதிய உச்சம் RRR: ரசிகர்களின் ரிவியூ!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR