இயக்குனர் சுந்தர் சி. இயக்கிய 'உள்ளத்தை அள்ளித்தா' மற்றும் 'மேட்டுக்குடி' போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த சுராஜ், 1998-ல் வெளியான மூவேந்தர் படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.  அதனை தொடர்ந்து தலை நகரம், மருதமலை,படிக்காதவன், மாப்பிள்ளை , அலெக்ஸ் பாண்டியன்,  சகலகலா வல்லவன், கத்தி சண்டை போன்ற படங்களை இயக்கினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | நயன்தாராவுடன் நடிக்கும் யூட்யூப் ஸ்டார் ரித்து!


தற்போது இவர் நடிகர் வடிவேலுவை வைத்து 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.   படப்பிடிப்பு பணிக்காக படக்குழு லண்டன் சென்றதாக அறிவிப்பு வெளியானது.  அதனை உறுதி செய்யும் விதமாக லண்டனில் வடிவேலுவும், இயக்குனர் சுராஜும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியானது.



இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் லண்டனிலிருந்து படக்குழு சென்னை திரும்பியது.  இதில் நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருவதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியானது.  இந்நிலையில் உடன் பயணித்த இயக்குனர் சுராஜுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது.


ALSO READ | நடிகர் வடிவேலுவிற்கு கொரோனா தொற்று உறுதி !


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR