பாஜக தோல்வி... தேசமெங்கும் ஜனநாயக ஒளி பரவட்டும் -கமல் ட்வீட்
எடியூரப்பா ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய முதல்வருக்கு வாழ்த்துக்கள் கூறிய மய்யம் கமல்ஹாசன்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், அதிக தொகுதிகளை வென்ற பாஜக-வை ஆட்சி அமைக்குமாறு கர்நாடக கவர்னர் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து கடந்த 17 ஆம் தேதி எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பாஜக பெரும்பான்மையை (19 ஆம் தேதி) நிருபிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனையடுத்து, நேற்று கர்நாடக மாநில சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே, உருக்கமான உறையினை நிகழ்த்திய முதல்வர் எடியூரப்பா, தனது முதல்வர் பதவியியை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்ததை அடுத்து, குமாரசாமி பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். வரும் 23 ஆம் தேதி குமாரசாமி பதவியேற்க உள்ளார்.
இச்சம்பவத்தை குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, "கர்நாடகத்தில் தோன்றியிருக்கும் ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும். வாழிய பாரத மணித்திருநாடு" எனக் கூறியுள்ளார்.