ஹாலிவுட் நடிகர் பென் ஆஃப்லெக் வழங்கும் படம், ஏஐஅர் (AIR). இப்படத்தை, அமேசான் ஸ்டுடியோஸ், ஸ்கைடேன்ஸ் ஸ்போர்ட்ஸ், ஆர்டிஸ்ட்ஸ் ஈக்விட்டி மற்றும் மாண்டலே பிக்சர்ஸ் ஆகிய நிருவனங்கள் தயாரித்துள்ளன.  ஏப்ரல் 5 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இந்த படம், விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ஏஐஆர் திரைப்படம்:


 


பேட்மேன், கான் கர்ள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமனா ஹாலிவுட் நடிகராக விளங்குபவர் பென் ஆஃப்லெக். நடிப்பைத் தவிர, இவருக்குள் ஒரு படத்தை இயக்கும் திறமையும் நிறையவே உள்ளது. இதுவரை ஹாலிவுட்டில் இதுவரை ஐந்திற்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது ஏஐஆர் எனும் படத்தையும் இவரே இயக்கியுள்ளார். இந்த படம், உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் பென் ஆஃப்லெக்குடன் இணைந்து ஹாலிவுட்டின் முக்கிய பிரபலங்களான மேட் டாமன், வோலா டேவிஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். 


 


திரையரங்குகளில் வெளியீடு: 


 


ஏஐஆர் திரைப்படம், உலகம் முழுவதும் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பலத்த வெற்றி பெற்றது. இந்த படத்தை பார்த்த பலர் படம் மிகவும் நன்றாக இருப்பதாகவும் பென் ஆஃப்லெக் ஒரு சிறந்த இயக்குநர் என்பதை நிரூபித்து விட்டதாகவும் விமர்சனங்கள் எழுதியிருந்தனர். படத்தில் நடித்திருந்த நடிகர் நடிகைகளுக்கும் அவர்களது நடிப்பிற்காக ரசிகர்கள் மத்தயில் பலமான பாராட்டு கிடைத்தது. 


 


மேலும் படிக்க | வந்தியதேவனை நேரில் காண கிளம்பிவந்த ஜப்பான் ரசிகர்கள்..கார்த்திக்கு கிடைத்த பெருமை


 


 


ஓடிடி ரிலீஸ்:


 


இந்தியாவில் பிரைம் வீடியோவில் மே 12 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏஐஆர் பிரத்யேகமாக திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் ஸ்டுடியோஸ், ஸ்கைடேன்ஸ் ஸ்போர்ட்ஸ், மாண்டலே பிக்சர்ஸ் மற்றும் அஃப்லெக் மற்றும் மேட் டாமோனின் ஆர்டிஸ்ட்ஸ் ஈக்விட்டியின் முதல் திட்டமான பென் அஃப்லெக்கின் ஏஐஆரின் டிஜிட்டல் பிரீமியர் பிரைம் வீடியோவில் மே 12 முதல் உலகெங்கிலும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஸ்ட்ரீம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தியாவிலுள்ள பிரைம் உறுப்பினர்கள் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் AIR ஐ பார்க்கலாம்.


 


விளையாட்டு மற்றும் கலாச்சார உலகில் புரட்சியை ஏற்படுத்திய அப்போதைய புதுமுக வீரர் மைக்கேல் ஜோர்டானுக்கும் நைக்கின் கூடைப்பந்து பிரிவிற்கும் இடையே உள்ள நம்பமுடியாத கூட்டாண்மையை வெளிப்படுத்தும் வகையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனைத்தையும் இழந்த நிலையில் இருக்கும் ஒரு விளையாட்டுக்குழு மேற்கொள்ளும் சவாலான பங்கேற்பு, தன் மகனின் மகத்தான திறமையின் மதிப்பை அறிந்த ஒரு தாயின் சமரசமற்ற பார்வை மற்றும் சிறப்பான  நிலையை எட்டப் போகும் ஒரு கூடைப்பந்து வீரரின்  சிறப்பு ஆகியவற்றை இப்படம் விவரிக்கிறது.


 


சிறப்பம்சங்கள்:


 


நைக் நிர்வாகி சோனி வக்காரோவாக மாட் டாமன் மேவரிக் நடிக்கிறார், நைக்கின் இணை நிறுவனர் பில் நைட்டாக அஃப்லெக் நடித்துள்ளனர், ராப் ஸ்ட்ராஸராக ஜேசன் பேட்மேன், டேவிட் பால்க்காக கிறிஸ் மெசினா, பீட்டர் மூராக மேத்யூ மஹர், ஜார்ஜ் ராவெலிங்காக மார்லன் வயன்ஸ், ஹோவர்ட் ஒயிட், வயோலாவாக கிறிஸ் டக்கர் டேவிஸ் டெலோரிஸ் ஜோர்டானாகவும், குஸ்டாஃப் ஸ்கார்ஸ்கார்ட் ஹார்ஸ்ட் டாஸ்லராகவும் நடித்துள்ளனர்.


 


மேட் டாமன் நடித்துள்ள திரைப்படத்தை பென் அஃப்லெக் இயக்குவது இதுவே முதல் முறையாகும். அலெக்ஸ் கான்வரி எழுதியுள்ள ஏஐஆர்-இன் இந்த ஸ்கிரிப்ட்டை, டேவிட் எலிசன், ஜெஸ்ஸி சிஸ்கோல்ட், ஜான் வெயின்பாக், அஃப்லெக், டாமன், மேடிசன் ஐன்லி, ஜெஃப் ராபினோவ், பீட்டர் குபர் மற்றும் ஜேசன் மைக்கேல் பெர்மன் ஆகியோர் தயாரித்துள்ளனர். 


 


80ஸ்களின் மறக்க முடியாத பாடல்கள் பல இத்திரைப்படத்தின் சவுண்ட் டிராக்கில் இணைக்கப்பட்டுள்ளன. இப்படத்தின் பாடல்கள் இப்போது சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட்டின் கேடலாக் டிவிஷனான லெகசி ரிகார்டிங்க்ஸ் மூலம் டிஜிட்டல் முறையில் கிடைக்கின்றன.


 


மேலும் படிக்க | கருப்பு கவுனில் கண்களை கவரும் பிரியங்கா..வைரலாகும் போட்டோக்கள்


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ