வந்தியதேவனை நேரில் காண கிளம்பிவந்த ஜப்பான் ரசிகர்கள்..கார்த்திக்கு கிடைத்த பெருமை

நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து அந்த பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் நடிகர் கார்த்தி. அதன்படி ஜப்பானில் இருந்து வந்து குடும்பம் ஒன்று பொன்னியின் செல்வன் 2 படத்தை பார்த்ததோடு கார்த்தியையும் நேரில் சந்தித்தனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 2, 2023, 02:46 PM IST
  • ஜப்பானில் இருந்து வந்த தனது ரசிகர்களை கார்த்தி சந்தித்தார்.
  • பொன்னியின் செல்வன் 2 படத்தை காண ரசிகர்கள் ஜப்பானில் இருந்து சென்னைக்கு வந்தனர்.
  • மணிரத்னம் இயக்கிய இப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
வந்தியதேவனை நேரில் காண கிளம்பிவந்த ஜப்பான் ரசிகர்கள்..கார்த்திக்கு கிடைத்த பெருமை title=

இந்திய திரைப்பிரமாண்டமாக, அனைத்து பக்கமும் பொன்னியின் செல்வன் பாகம் 2 வெற்றியை பெற்றுள்ளது. பாகம் 1 இன் எதிர்ப்பார்ப்பை கடந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது. இந்த படத்தினை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதற்காக தம்பதி சகிதமாக ஜப்பானிலிருந்து சென்னைக்கு வந்திருக்கிறார் நடிகர் கார்த்தியின் ரசிகை. 

பொதுவாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் முதல் நாள் ஷோவுக்கு தான் இந்த மாதிரியான ஆச்சர்யங்கள் நடக்கும். ஆனால் தற்போது நடிகர் கார்த்தியின் ரசிகை ஜப்பானிலிருந்து வருகை தந்திருப்பது கோடம்பாக்கத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்தவகையில் ஜப்பானிலிருந்து வருகை புரிந்த தெருமி ககுபரி ஃபுயுஜிடாவை (Terumi Kakubari Fujieda) மற்றும் ISAO Endo நடிகர் கார்த்தி தனது வீட்டிற்கு வரவைத்து அவருக்கு உணவு பரிமாறி உரையாடி மகிழ்ந்துள்ளார். 

மேலும் படிக்க | இயக்குனருக்கும் மகேஷ் பாபுவுக்கும் இடையே மோதல்? சிக்கலில் SSMB 28!

இந்த சந்திப்பு குறித்து ரசிகை தெருமி ககுபரி ஃபுயுஜிடா (Terumi Kakubari Fujieda) கூறும்போது., நான் வேலை நிமித்தமாக சில காலம் இந்தியவில் தங்கியிருந்தேன், அப்பொதிலிருந்து நான் நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகை ஆனேன். பொன்னியின் செல்வன் முதல் பாகம் புரிந்து கொள்ள கடினமாக இருந்தது. அதில் கார்த்தி நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஜப்பானில் வெளியாக காலமாகும் என்பதால் உடனே பார்த்தாக வேண்டும் என்று அங்கிருந்து கிளம்பி இந்தியா வந்தோம். முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தை பார்த்து மிகவும் என்ஜாய் செய்தேன். பொன்னியின் செல்வன் 2 மிக அட்டகாசமான படம் என்றார்.

நடிகர் கார்த்தியை சந்தித்தது குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது., மிக சந்தோசமான அனுபவம், #ஜப்பான் பட பிடிப்பில் மிக பிஸியான நேரத்தில் என்னை சந்திக்க ஒப்புக்கொண்டு என்னை வீட்டுக்கு அழைத்தார். அவர் மனைவி கேசரி பரிமாறினார். மிக எளிமையாக என்னிடம் பழகினார். அவருடன் பல விசயங்கள் உரையாடினேன். RRR படம் போல் இந்தப்படத்தையும் ஜப்பானில் பிரமாண்டமாக வெளியிடுமாறு கேட்டுக் கொண்டேன். ஜப்பானில் தமிழ்ப்படங்களுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது படக்குழுவை ஜப்பான் அழைத்து வரக் கோரிக்கை வைத்திருக்கிறேன். கார்த்தியின் அடுத்த படம் #ஜப்பான் என்ற போது ஆச்சர்யப்பட்டேன். ஆனால் அது ஜப்பான் பற்றிய படமல்ல ஜப்பான் எனும் பெயர் மட்டுமே என்ற போது கொஞ்சம் வருத்தம் தான். இருப்பினும் நாம் ஜப்பான் படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளேன். ஜப்பானை வைத்து தமிழ் படங்கள் வர வேண்டும் என்றார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு பிறகு நடிகர் கார்த்திக்கு ஜப்பானிலிருந்து சென்னை வந்து அவருடைய படத்தை பார்த்து சென்றுள்ளனர் ரசிகர்கள். இதன்மூலம் ரஜினிகாந்துக்கு பிறகு வெளிநாட்டு ரசிகர்களை பெற்றுள்ள நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கார்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | V என்ற எழுத்தை விடாத அஜித்... மறைந்திருக்கும் ரகசியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News