அங்க போனா மாறிடுவாங்களோ - பிக்பாஸ் மணிகண்டன் குறித்து தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ்
பிக்பாஸில் பங்கேற்றிருக்கும் மணிகண்டன் குறித்து அவரது தங்கையும், நடிகையுமான ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியிருப்பது வைரலாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொடங்கி நடந்துவருகிறது. இதில் சாந்தி, ராபர்ட், மகேஸ்வரி, ரச்சிதா, அசல், ஆயிஷா, ஜனனி, நிவாஷினி, அமுதவாணன், மணிகண்டன், ஷிவின், குயின்சி, மைனா நந்தினி, ராம், தனலட்சுமி, ஏடிகே, அசீம், விக்ரமன், கதிர், ஷெரின் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் ஜிபி முத்து தனது மகனை காண வேண்டுமென என்பதற்காக அவரது விருப்பத்தின்பேரில் அனுப்பி வைக்கப்பட்டார். இதனையடுத்து சாந்தி, அசல், ஷெரினா உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த வாரம் விஜே மகாலட்சுமி எலிமினேட் செய்யப்படுகிறார்.
இந்தச் சூழலில் பிக்பாஸ் வீட்டில் மணிகண்டன் சிறப்பாக விளையாடிவருகிறார். தனக்கு கொடுக்கப்படும் டாஸ்க்கை சிறப்பாக செய்துவரும் அவர் ஹவுஸ் மேட்ஸுடனும் நல்லமுறையில் நடந்துவருகிறார். குறிப்பாக ஸ்வீட் செய்யும் டாஸ்க்கில் கன்வேயர் பெல்ட்டிலிருந்து பொருள்களை கைப்பற்ற அட தேன் அட டீம் உறுப்பினர்கள் திணறிக்கொண்டிருக்க மணிகண்டன் வந்த பிறகு பொருள்களை எடுப்பது அந்த டீமுக்கு இலகுவானது.
அதேசமயம் அந்த டாஸ்க்கின்போது தனலட்சுமியுடன் மணிகண்டன் போட்ட சண்டை, அமுதவாணனுடன் அவர் செய்த வாக்குவாதம் என இந்த வாரத்தில் மணிகண்டனின் செயல்பாடு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதற்கு காரணம் தனலட்சுமியின் நடவடிக்கைதான் என ஒருதரப்பினர் கூறினாலும், அந்த நேரத்தில் மணிகண்டன் சிறிது பொறுமையை கடைப்பிடித்திருக்கலாம் எனவும் மற்றொரு தரப்பினர் கூறிவருகின்றனர்.
இதற்கிடையே மணிகண்டன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம் மணிகண்டன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா, “நானும் பிக்பாஸ் பார்த்தேன். போன வாரம் புஜ்ஜி (மணிகண்டன்) சண்டை போட்டிருந்தான். பிக் பாஸ் வீட்டுக்கு போனதில் இருந்து அவன் மிகவும் சீரியஸா இருக்கான், ஆனால் உண்மையில் புஜ்ஜி அப்படியில்லை. பயங்கர ஜாலியான ஆள். ஆனால் அந்த மாதிரி இன்னும் பிக்பாஸில் மணியை பார்க்கவில்லை. ஒருவேளை அந்த வீட்டுக்கு போனா அப்படி மாறிடுவாங்களோ இல்லை அப்படி காட்டுகிறார்களோ என தெரியவில்லை” என்றார்.
மேலும் படிக்க | லவ் டுடே இயக்குநருக்கு ரஜினியின் வாழ்த்து - அடுத்த படத்திற்கான கதை ரெடியா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ