தனுஷுடனான பிரிவுக்குப் பிறகு பிஸியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்; ஸ்பெஷல் போட்டோ

பிரிவுக்குப் பிறகு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஒரே ஹோட்டலில் தங்கியிருக்கும் செய்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். தனுஸ்-ம் ரஜினியின் மூத்த மகளும் ஆன ஐஸ்வர்யா ஆகியோருக்கு 2004-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் விவாகரத்து செய்வதாக நேற்று அறிவித்துள்ளனர். இது ரஜினி (Rajinikanth) மற்றும் தனுஷ் (Dhanush) ரசிகர்களிடையேயும், சினிமா உலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது திரையுலகினர் மற்றும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ALSO READ | தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து
இது குறித்து கடந்த வாரம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில், “18 வருடங்கள் நண்பர்களாக, துணையாக, பெற்றோர்களாக வாழ்ந்தோம். தற்போது நாங்கள் ஒன்றாக பிரிய உள்ளோம். எங்களை நாங்கள் புரிந்து கொள்ள இந்த பிரிவை ஏற்படுத்தியுள்ளோம். எங்களது இந்த பிரிவை ஏற்றுக்கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டிருந்தனர். இது பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து சமீபத்தில் தனுஷ் தனது வாத்தி படப்பிடிப்பிற்காகவும், ஐஸ்வர்யா (Aishwarya) தனது பட வேலைகளுக்காகவும் ஐதராபாத்தில் ஒரே ஹோட்டலில் தங்கியிருக்கும் செய்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா தனது அடுத்த வேலையில் பிஸியாகி விட்டார். அதன்படி ஐஸ்வர்யா ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து இசை ஆல்பத்தை உருவாக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த ஆல்பத்திற்கான பேச்சு வார்த்தை ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்துள்ளது. அது காதலர் தினத்திற்காக ஒரு ஆல்பம் பாடலை அவர் இயக்கவுள்ளார். அதில் கலந்துக் கொண்ட ஐஸ்வர்யாவின் படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ALSO READ | சூர்யாவுக்காக சிவகார்த்திகேயனின் பாடல் வரிகள் எப்படி உள்ளது?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR