நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை தொடர்ந்து ஹெச்.வினோத்துடன் மூன்றாவது முறையாக அஜித் இணைந்துள்ளார் 'ஏகே61' படத்தின் மூலம் இணைந்துள்ளார்.  வலிமை படத்தை தயாரித்த போனி கபூர் தான் இந்த திரைப்படத்தையும் தயாரிக்கிறார்.  தயாரிப்பாளர்கள் ஏற்கனவே திட்டப்படியே படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது.  இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக  பிரத்யேகமாக ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டுள்ளது.  தற்காலிகமாக 'ஏகே61' என்று பெயரிடப்பட்டு இருக்கும் இந்த திரைப்படம் நிஜ வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டது என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | கைதி 2 வேலைகள் எப்போது தொடக்கம்?... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்


ஏற்கனவே இந்த படம் வங்கி கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது என்று கூறப்பட்டது, அதனால் ஏதேனும் உண்மையில் வங்கி கொள்ளை நடந்த சம்பவத்தை இயக்குனர் எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.  இருப்பினும், இது உண்மையான கதையா என்பது குறித்த எவ்வித தகவலையும் இயக்குனர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  படம் வெளியாவதற்கு இன்னும் அதிக நாட்கள் இருப்பதால் அதற்கிடையில் இதுகுறித்த தகவலை இயக்குனர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  'ஏகே 61' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  



அனேகமாக இந்த திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி படம் திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இருப்பினும் பட வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர்கள் குழு இன்னும் வெளியிடவில்லை.  அஜித் நடிக்கும் இந்த 'ஏகே61' படத்தில் மஞ்சு வாரியர், வீரா, ஜான் கொக்கன், மகாநதி சங்கர் போன்ற பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் வெளியாக உள்ளது.


மேலும் படிக்க | மார்வெல் வெப் சீரிஸில் ஒலித்த சூப்பர் ஸ்டார் பாடல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR