மார்வெல் வெப் சீரிஸில் ஒலித்த சூப்பர் ஸ்டார் பாடல்!

பிரபலமான அமெரிக்க தொடரான மார்வெல் தொடரில் ரஜினிகாந்த நடித்த லிங்கா படத்தின் பாடல் இடம்பெற்றுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 12, 2022, 02:20 PM IST
  • ​​'Ms Marvel' டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது.
  • இந்த தொடரில் ரஜினிகாந்தின் பாடல் இடம்பெற்று இருப்பது தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது.
  • ரஜினி ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.
மார்வெல் வெப் சீரிஸில் ஒலித்த சூப்பர் ஸ்டார் பாடல்! title=

புதிய அமெரிக்க வெப் தொடரான ​​'Ms Marvel' டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது. ஒரு பாக்கிஸ்தானிய - அமெரிக்க உயர்நிலைப் பள்ளி மாணவி ஒரு சூப்பர் ஹீரோவாக மாறும் பயணத்தை இந்த தொடர் மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.  மார்வெல் சினிமா வரலாற்றிலேயே 'Ms Marve'l தான் முதல் பெண் தெற்காசிய மற்றும் முஸ்லீம் சூப்பர் ஹீரோ ஆக உருவாக்கப்பட்டு இருக்கிறது.  ஆறு எபிசோட்கள் கொண்ட இந்த தொடர் தி மார்வெல்ஸ் திரைப்படத்தை உருவாக்க வழிவகுப்பதாக அமைந்துள்ளது, இதில் Ms Marvel பெரிய திரையில் கேப்டன் மார்வெலுடன் இணையும்.  

marvel

மேலும் படிக்க | 'விக்ரம்' படத்திற்கு பிறகு அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் தமிழ் படங்கள்!

இந்த தொடரில் தமிழ் திரை பிரபலமான ரஜினிகாந்தின் பாடல் இடம்பெற்று இருப்பது தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது.  Ms Marvel தொடரின் முதல் எபிசோடில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' படத்தின் 'ஓ நண்பா' என்ற தமிழ் திரைப்படப் பாடல் இடம்பெற்றிருந்தது.  இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருந்தார்.  இந்தப் பாடல், தொடரின் டைட்டில் கார்டு தொடங்கும் போது இசைக்கப்பட்டது, உலகளாவிய நிகழ்ச்சியில் தமிழ் பாடல் இடம்பெற்று இருப்பதை கண்ட இந்திய ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.  இதுதவிர இந்த தொடர்களில் மற்ற இந்திய பாடல்களான ரிட்விஸின் சேஜ், ராஜ குமாரியின் 'காடஸ்', அங்கஸ் கேம்ப்பெல் மற்றும் குல்லி பும்ராவின் 'டிஸ்கோ கல்லி' மற்றும் இஷ்க் பெக்டரின் 'டாக்கு டாடி' போன்ற பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

 

மார்வெல் சினிமாவில் இந்த தொடரில் தான் முதன்முதலாக முஸ்லிம் பெண் இமான் வெள்ளனி என்பவர் கமலா கான் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  மேலும் இவருடன் இந்த தொடரில் மோகன் கபூர், நிம்ரா புச்சா, அராமிஸ் நைட், சாகர் ஷேக், ரிஷ் ஷா, ஜெனோபியா ஷ்ராஃப், மாட் லின்ட்ஸ், யாஸ்மீன் பிளெட்சர், லைத் நக்லி, அசார் உஸ்மான் மற்றும் டிராவினா ஸ்பிரிங்கர் உள்ளிட்ட ஆசிய மற்றும் அமெரிக்க நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  அதோடு இதில் பாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தர் மற்றும் பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான் ஆகியோரும் நடித்துள்ளனர்.

மேலும் படிக்க | தனுஷை தொடர்ந்து 21 வயது இளைஞராக நடிக்கும் சிம்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News