நாளை அஜித்தின் ஏகே 62 அறிவிப்பு? டைட்டில் இது தானா?
அஜித் குமார் நடிக்கும் ஏகே 62 படத்தின் அதிகார்வப்பூர்வ அறிவிப்பு நாளை அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோலிவுட்டில் டாப் 5 நடிகர்களில் ஒருவரான அஜித்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அஜித் நடிப்பில் இந்த வருடம் பொங்கல் தினத்தில் துணிவு படம் வெளியானது. வினோத் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. துணிவு படம் விஜய்யின் வாரிசு படத்துடன் இணைந்து வெளியானது. 10 வருடங்களுக்கு பிறகு அஜித் மற்றும் விஜய்யின் படம் ஒரே நாளில் வெளியானதால் திரையரங்குகள் விழாகோலமாக இருந்தது. இந்த படம் வெளியாவதற்கு முன்னரே அஜித்தின் அடுத்த படமான ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்றும், லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானது. அஜித்தின் மிகப்பெரிய ரசிகரான விக்னேஷ் சிவன் இந்த அறிவிப்பை மிகவும் உற்சாகத்துடன் தெரிவித்து வந்தார். இந்நிலையில் விக்னேஷ் சிவனின் கதை லைக்கா நிறுவனத்திற்கு பிடிக்காததால் அஜித்தின் ஏகே 62 படத்தில் இருந்து அவர் வெளியேறினார்.
மேலும் படிக்க | உயிர் உங்களுடையது தேவி... குந்தவை எனும் ஐயன் லேடி - மறக்க கூடாத சோழர் குல இளவரசி!
இந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது, இருப்பினும் இதற்கும் அஜித்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு கதை பிடிக்கவில்லை என்றும் விக்னேஷ் சிவன் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். மேலும் சமீபத்தில் அஜித்தின் தந்தை இறந்ததால் இந்த படத்தை பற்றிய அறிவிப்பு தள்ளி போனது. ஏகே 62 படத்தின் இயக்குனர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வருகிறது. விஷ்ணுவர்தன் தான் இந்த படத்தை இயக்கப் போகிறார் என்று கூறப்பட்ட நிலையில் மகிழ் திருமேனி இயக்க உள்ளார் என்றும் கூறப்பட்டது, மேலும் இதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியானது.
ஆனாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் மே ஒன்றாம் தேதியான நாளை அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஏகே 62 படம் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த கலகத் தலைவன் படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. ஏகே 62 படம் ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் தற்போது பைக் பயணத்தில் ஈடுபட்டுள்ளார், வெளிநாடுகளில் இருந்து அவர் பைக் ஓட்டிச் செல்லும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்தப் படத்திற்கு 'விடா முயற்சி' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க: 'லியோ' படத்தில் தளபதி விஜய்யுடன் நடிக்கும் ரியல் சிங்கம்! வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ