மங்காத்தா பார்ட் 2 அப்டேட்டை கொடுத்த நடிகர் அஜித்
மங்காத்தா பார்ட் 2 படத்திற்கான அப்டேட்டை மனைவி ஷாலினி பிறந்தநாளில் கொடுத்துள்ளார் நடிகர் அஜித்.
துணிவு ரிலீஸ்
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்திருக்கும் துணிவு படம் அடுத்தாண்டு பொங்கலன்று அதிரிபுதிரியாக வெளியாக இருக்கிறது. போனி கபூர் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது. துணிவுக்கு போட்டியாக நடிகர் விஜய்யின் வாரிசு படமும் வெளியாக இருப்பதால், இப்போதே இரு படங்களின் மீதான எதிர்பார்ப்பு ஏகபோகமாக இருக்கிறது.
இரண்டு படங்களுக்கும் இதுவரை இல்லாத அளவுக்கு பிஸ்னஸூம் கிடைத்துள்ளது. வாரிசு படத்தை தமிழகத்தில் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. தியேட்டர் ஒதுக்கீட்டில் தொடங்கி ரிலீஸ் வரைக்கும் இரு படங்களுக்கும் பல கோணங்களில் முட்டல் மோதல் இருக்கும் நிலையில், திரையிலும் மோதிக் கொள்ள இருக்கின்றன. படத்தை பார்த்தபிறகு ரசிகர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கப்போகிறது என்பது தான் இப்போதைக்கும் இருக்கும் சஸ்பென்ஸ். யாருடைய ரசிகர்கள் யாரை ரோஸ்ட் செய்யப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.
மேலும் படிக்க: ’வாரிசுக்கு இதை செய்ய வேண்டாம்’ ரசிகர்களுக்கு விஜய் சொன்ன 2 முக்கியமான விஷயம்!
மங்காத்தா கூட்டணி
இது ஒருபுறம் இருக்க, மங்காத்தா பார்ட் 2க்கான அப்டேட்டை கொடுத்திருக்கிறார் நடிகர் அஜித். வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜூன் ஆகியோர் நடித்த மங்காத்த மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்தப் படத்தின் பார்ட் 2 எப்போது வெளியாகும் என ரசிகர்கள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். வெங்கட் பிரபுவும் படத்திற்கான கதை ரெடி, அஜித் ஓகே சொன்னால் போதும் என ஏற்கனவே கூறியிருந்தார்.
அதற்கான சமிக்கையை இப்போது கொடுத்திருக்கிறார் அஜித். அண்மையில் மனைவி ஷாலினி பிறந்தநாளைக் கொண்டாடிய அவர், அர்ஜூனை அழைத்து விருந்து கொடுத்திருக்கிறார். மேலும், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இதை வைத்தே மங்காத்தா கூட்டணியை விரைவில் எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் கொளுத்தி போட்டுள்ளனர். இதில் இருக்கும் இன்னொரு டிவிஸ்ட் என்னவென்றால், மங்காத்தா பார்ட் 2 படத்திற்காக அஜித் - அர்ஜூன் இணயப்போகிறார்களா? இல்லை வேறு படத்திற்கான சமிக்கையா? என்பதையும் கேட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | அல்லு அர்ஜுனின் நண்பருக்கு எதிராக நிர்வாண போராட்டம் நடத்திய நடிகை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ