AK63 Title Announcement: நடிகர் அஜித் குமாரின் 63ஆவது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் நிலையில், அப்படத்திற்கு Good Bad Ugly என பெயரிடப்பட்டுள்ளது. ஆதிக ரவிச்சந்திரன் திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், மார்க் ஆண்டனி ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார். Good Bad Ugly திரைப்படம் 2025ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாக திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் அஜித் குமார் தற்போது 'விடாமுயற்சி' என பெயரிடப்பட்ட அவரது 62ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த திரைப்படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இதற்கான படப்பிடிப்பு அஜர்பைஜனில் பல கட்டங்களாக நடைபெற்றது. இன்னும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெறாத நிலையில், அஜித் குமார் நடிக்கும் அவரது 63ஆவது திரைப்படத்தின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டது. 


AK63: திரைப்படத்தின் பெயர் என்ன?


அஜித் குமாரின் 63ஆவது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், மார்க் ஆண்டனி ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்க உள்ளார் என நீண்ட நாள்களுக்கு முன்னேர தகவல்கள் வெளியாகின. சமீப காலமாக அஜித் ஒரு திரைப்படத்தை நடித்து அந்த திரைப்படம் வெளியான பின்னரே புதிய படத்தின் அப்டேட்டும், பெயரும் வெளியாகும்.


மேலும் படிக்க | மஞ்சுமெல் பாய்ஸ் to பிரேமலு-அதிவேகமாக 100 கோடி கல்லா கட்டிய மலையாள படங்கள்!


ஆனால், இம்முறை படத்தின் பெயர், அதன் படப்பிடிப்பு தொடங்கும் தேதி, ரிலீஸிற்கு திட்டமிடப்பட்ட தேதி உள்ளிட்டவற்றையும் இன்றைய அறிவிப்பில் வெளியிட்டுள்ளனர். அஜித் குமாரின் 63ஆவது திரைப்படத்திற்கு,"Goog Bad Ugly" (குட் பேட் அக்லி) என பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கில் பிரபல திரைப்படங்களான ரங்கஸ்தலம், புஷ்பா 1, புஷ்பா 2 ஆகிய திரைப்படங்களை தயாரித்த Mythiri Movie Makers இத்திரைப்படத்தையும் தயாரிக்கின்றனர். படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் அறிவிக்கப்பட்டுள்ளார். 



கிளிண்ட் ஈஸ்ட்வுட் படத்தின் தழுவலா?


அதேபோன்று, Good Bad Ugly திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு ஜூன் மாதம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் பெயர், 1966ஆம் ஆண்டு இத்தாலிய மேற்கத்திய திரைப்படமான the Good, the Bad, and the Ugly என்ற படத்தின் தழுவலா எனவும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களின் அனுமானங்களை தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர். 


இந்த இத்தாலிய திரைப்படம் (கிளிண்ட் ஈஸ்ட்வுட்) Clint Eastwood என்ற நடிகரின் திரைப்படமாகும். சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா XX திரைப்படத்தில் கதாநாயகனான ராகவா லாரன்ஸ், கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் பயங்கர ரசிகராக இருப்பார் என்பது நினைவுக்கூரத்தக்கது. முன்னதாக, விடாமுயற்சி திரைப்படத்தின் அப்டேட்டை கேட்டுவந்த ரசிகர்களுக்கு தனது புதிய திரைப்டத்தின் அப்டேட்டை கொடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகர் அஜித் குமார்.


மேலும் படிக்க | ஆத்தாடி..லோகேஷ் கனகராஜ்ஜிற்கு இத்தனை கோடி சொத்து இருக்கா! மொத்தம் எவ்வளவு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ