பெப்ஸி யூனியன் மாநில பொது செயலாளர் சாமி நாதன் தமிழ் சினிமாவில் உள்ள பிரச்சனைகள் குறித்து தனியார் தொலைக்காட்சியில் பேசி உள்ளார். வட மாநிலத்தவர் இங்கு வந்து படம் எடுத்தாலும் நமக்கு 70 சதவீதம் இங்கே இருக்கக்கூடியவர்களுக்கு வேலை வாய்ப்பு இருக்கும், ஆனால் இப்பொழுது வட மாநிலத்தவர் இங்கு வந்து படம் எடுப்பது குறைந்து விட்டது. 20 வருடத்திற்கு முன்பு அப்பொழுது தமிழில் ஹிட் ஆகிய படங்களை தெலுங்கில் ரீமிக்ஸ் செய்வார்கள், அப்பொழுது இங்கு வந்து அதிகமாக படப்பிடிப்பு நடத்துவார்கள், இப்பொழுது குறைந்து விட்டது. இப்பொழுது மீண்டும் அட்லியின் ஜவான் திரைப்படம் சென்னையில் படப்பிடிப்பு நடத்தியதால் இங்கு உள்ள நிறைய பெப்ஸி தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்தது. அதற்காக அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் நன்றி தெரிவித்திருந்தோம். ஜவான் திரைப்படம் படப்பிடிப்புகள் இங்கே 15 நாட்கள் நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | லியோ படத்துடன் மோதும் டாப் 2 ஸ்டார்களின் படங்கள் - அப்போ பாக்ஸ் ஆஃபீஸ்?



தினமும் ஆயிரம் பேருக்கு மேலாக பயன்பெற்றனர், இந்தி படம் என்றாலே 2000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், இதற்காக மனபூர்வமாக அட்லி அவர்களை வாழ்த்தினோம்.  எல்லா நடிகர்களும் ஐதராபாத் தேடிப் போவதால் இங்கே இருக்கக்கூடிய நடிகர்கள் மற்றும் பலருக்கு வேலை வாய்ப்புகள் குறைந்தது. நடிகர் அஜித் வெளி மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்தியதால் அவருக்கு கடிதம் அனுப்பி இருந்தோம், மீண்டும் அவர் அதே தொடர்ந்தால் மீண்டும் இது குறித்து பேசுவோம், அங்கு இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது குறித்து அவர் கவனத்திற்கு சென்றதா இல்லையா என்று தெரியவில்லை. வட இந்திய தொழிலாளர்களும் 30 சதவீதம் இங்கு வந்து வேலை பார்த்தார்கள்.


ஆர் கே செல்வமணி தலைவராக வந்த பிறகு பெஎப்சி யூனியன் நல்லா இயங்குகிறது, எந்த குறையும் இல்லை. அனைவருக்கும் வேலை வாய்ப்பு இருப்பதால் பிஸியாக உள்ளார்கள்.  பயனூரில் இருக்கக்கூடிய பெப்சி சங்கத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஜெயிலர் மற்றும் லியோ திரைப்படங்கள் 15 நாட்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடத்தப்பட்டது. செட் ஒர்க் இரண்டு மாதங்கள் நடந்தது, முழுக்க முழுக்க இங்கே இருக்கக்கூடியவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. பண பற்றாக்குறையின் காரணமாக திரைப்பட நகரம் அமைய தாமதமாகிறது, ஏற்கனவே இதை பற்றி அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் அதில் இப்பொழுது ஒரு தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.


இடையில் ஆட்சி மாற்றங்கள், கொரோனா போன்றவையால் தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் போய்விட்டது. இப்பொழுது தமிழக முதல்வரிடம் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளோம், அது மந்திரிகளின் பரிசீலனையில் உள்ளது. விரைவில் நடக்கும் என்று நம்பிக்கையோடு உள்ளோம், அரசாங்கம் அதை அடுக்குமாடி குடியிருப்புகளாக கட்டி கொடுத்தால் திரைப்பட தொழிலாளர்களுக்கு அது இலவசமாகவே கொடுப்போம். விஜய் சேதுபதி 1.35 கோடி கொடுத்து உதவினார் என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க | ஹீரோவாக அறிமுகமாகும் தோனி! அதுவும் இந்த படத்திலா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ