இந்தியன் 2 டிஜிட்டல் உரிமை மட்டுமே இத்தனை கோடியா? மாஸ் காட்டிய கமல்!

பிரபல இயக்குனர் ஷங்கரும் உலகநாயகன் கமல்ஹாசனும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு  இந்தியன் படத்தின் தொடர்ச்சியான இந்தியன் 2க்காக இணைந்துள்ளனர்.  

Written by - RK Spark | Last Updated : Jul 23, 2023, 03:53 PM IST
  • இந்தியன் 2 டிஜிட்டல் உரிமையை Netflix வாங்கியுள்ளது.
  • இந்தியன் 2 படத்தின் டிஜிட்டல் உரிமை 200 கோடி ரூபாய்.
  • படத்தின் ரிலீஸ் தேதி குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.
இந்தியன் 2 டிஜிட்டல் உரிமை மட்டுமே இத்தனை கோடியா? மாஸ் காட்டிய கமல்! title=

கோலிவுட்டில் அனைவரும் மிக ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் இந்தியன் 2 ஆகும், இந்தியன் 1 திரைப்படம் அதன் காலம் தாண்டியும் இன்றளவும் மக்களால் பார்த்து ரசிகப்படுகிறது. கமலின் நடிப்பு குறித்தும் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாக அது இருந்தது. இந்நிலையில் கமலின் ரசிகர்கள் மட்டும் இன்றி அனைவருமே இந்தியன் 2 ஆக காத்திருக்கின்றனர்.  இந்தியன் 2 படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் நிலையில் உள்ளது. இதற்கிடையில், இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை OTT நிறுவனமான நெட்ஃபிக்ஸ் பரபரப்பான விலைக்கு வாங்கியுள்ளது.  இந்தியன் 2 படத்தின் டிஜிட்டல் உரிமை 200 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்ரம் படத்தின் இண்டஸ்ட்ரி ஹிட் மூலம் கமலின் சமீபத்திய பார்ம் இந்தியன் 2 போன்ற ஒரு தொடர்ச்சியாக படத்திற்கான ஆர்வத்தை கொண்டு வந்துள்ளது, அதுமட்டுமின்றி, ஷங்கரின் பிராண்ட் அனைத்து மொழிகளிலும் டிஜிட்டல் உரிமைகளுக்கு இந்த அசாதாரண விலையைப் பெற்றது.

மேலும் படிக்க | கடல் கன்னியாக மாறிய கௌரி கிஷன்! இணையத்தை கலக்கும் படங்கள்!

இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது வரை படத்தின் ரிலீஸ் தேதி குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை. இப்படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது. இப்படத்தில் கமல்ஹாசனுடன் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் ஃபிலிம்ஸ் இணைந்து மிகப்பெரிய அளவில் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். 

இந்தியன் 1 படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனதை போலவே இந்தியன் 2 படத்தின் பாடல்களும் இமயத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2 குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது இந்த செய்தி கமல் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கும். கமல் விக்ரம் படத்திற்கு பிறகு பிஸியான நடிகராக மாறி உள்ளார்.  தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பை முடித்துள்ள கமல், அடுத்து பிரபாஸின் ப்ராஜெக்ட் கே படத்தில் இணைந்துள்ளார்.  இந்த படத்திற்காக அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும், வினோத் இயக்கத்தில் அடுத்து நடிக்க உள்ளார் மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் 34 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க உள்ளார்.  இது தவிர பிக்பாஸ் சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார். 

அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் அதற்குள் இந்த அனைத்து கமிட்மெண்டுகளையும் முடிக்க கமல் திட்டமிட்டுள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் கமல் கோவை தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.  எவ்வாறாயினும் இந்த அடுத்தடுத்த அப்டேட்கள் கமல் ரசிகர்களை குஷியில் வைத்துள்ளது.

மேலும் படிக்க | சூர்யாவின் மிரட்டலான 'கங்குவா' பட கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News