Thunivu: செல்பி எடுத்த அஜித்! மகிழ்ச்சியில் அமீர் - பாவனி
துணிவு ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் அஜித், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமீர் - பாவனி மற்றும் சிபி சக்ரவர்த்தியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இப்போது வைரலாகியுள்ளது.
அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் மாஸாக உருவாகிக் கொண்டிருக்கிறது.வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து படம் உருவாகும் இந்தப் படம், மங்காத்தா பாணியில் படம் மாஸாக இருக்கும் என கூறப்படுகிறது. நடிகர் அஜித்துடன் சேர்ந்து மஞ்சுவாரியர், சர்பாட்டா பரம்பரை படத்தின் மூலம் பிரபலமாக கோக்கன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் ‘துணிவு’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். வலிமை வெளியானவுடன் அதே ஜோரில் தொடங்கப்பட்ட ஏகே 61 படப்பிடிப்பு, ஜோராக சென்று கொண்டிருக்கிறது. லேட்டஸ்டாக இந்த ஷூட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீர் - பாவனி மற்றும் சிபி சக்ரவர்த்தி ஆகியோர் இணைந்துள்ளனர்.
பிக்பாஸ் தமிழ் 5 சீசனில் மூன்று பேருமே போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். பாவனி மற்றும் சிபி ஆகியோர் போட்டியாளர்களாக முன்பே வந்திருந்த நிலையில், அமீர் வைல்டு கார்டு போட்டியாளராக வந்தார். இருப்பினும், ஏற்கனவே களத்தில் இருந்த போட்டியாளர்களுக்கு கடும் போட்டியை கொடுத்தார். விடா முயற்சியால் முதல் போட்டியாளராகவும் இறுதிப் போட்டிக்கு சென்றார் அமீர். இறுதிப் போட்டியில் 4வது இடத்தை பெற்றாலும், வைல்டு கார்டு போட்டியாளராக வந்து இந்தளவுக்கு சென்றதற்காக அவரை ரசிகர்கள் வாழ்த்தினர்.
மேலும் படிக்க | ஏ.கே61 படத்தில் களமிறங்கும் பிக்பாஸ் காதல் ஜோடி; மாஸ்டர் நடிகருக்கும் வாய்ப்பு
3வது இடத்தை பாவனி பிடித்தார். இருவரும் வீட்டில் இருந்தபோதே நெருக்கம் காண்பித்தனர். அது வெளியில் வந்தும் தொடர்ந்தது. அமீர் பலமுறை தன்னுடைய காதலை வெளிப்படுத்தியபோதும் ஓகே சொல்லாமல் மவுனம் மட்டும் காத்து வந்தார் பாவ்னி. அவருடன் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற பிறகு கிரீன் சிக்னலை கொடுத்தார். அந்த மகிழ்ச்சியில் இருந்த இருவருக்கும் உடனே அடுத்த ஜாக்பாட் அடித்தது. அல்டிமேட் ஸ்டார் அஜித் அடுத்ததாக நடிக்கும் துணிவு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர்களுக்கு மட்டுமல்லாமல் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிபி சக்கரவர்த்தியும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். மூன்று பேரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் அஜித்துடன் எடுத்துக் கொண்ட செல்பி தற்போது வெளியாகி இருக்கிறது.
அந்த செல்பியை நடிகர் அஜித்தே எடுத்திருக்கிறார். புகைப்படத்தில் அமீர் - பாவனி, மற்றும் சிபிசக்கரவர்த்தி மூன்று பேரும் சிரித்த முகத்தோடு போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பாவ்னி, என்னுடைய அண்ணா என கேப்சன் இட்டுள்ளார்.
மேலும் படிக்க | பொன்னியின் செல்வன்: 3 நாளில் உலகம் முழுவதும் ரூ.230 கோடிக்கு மேல் வசூல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ