துணிவு: அஜித் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீசான துணிவு திரைப்படம் சக்கை போடு போட்டு வருகின்றது. அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து சினிமா ரசிகர்களின் ஆதரவையும் இப்படம் பெற்றுள்ளது. எச் வினோத்தின் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் வெளியான துணிவு படம் ஒரு ஆக்‌ஷன் படமாகும். இதில் அஜித் மாஸ் காட்டியுள்ளார். அஜித் ரசிகர்கள் பூரித்துப்போகும் அளவுக்கு படம் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கேன், பிக்பாஸ் பிரபலங்கள் பாவனி, அமீர், சிபி சக்ரவத்தி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் ஜிப்ரான் இசையில் வெளியான 3 பாடல்களும் இப்படத்தில் ஹிட் அடித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துணிவு ஓடிடி ரிலீஸ்


தற்போது அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாகி 25 நாட்களை கடந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘துணிவு’ திரைப்படம் வரும் 8-ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்கில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது போலவே ஓடிடியிலும் நல்ல வரவேற்பு பெரும் என்று படக்குழுவினரால் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக நெட்பிளிக்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்த அப்டேட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | HBD STR: பிறந்தநாள் பரிசாக வந்த சிம்புவின் ‘பத்து தல’ பாடல், தெறிக்கும் இசை, ஜொலிக்கும் சிம்பு !! 




 முன்னதாக துணிவு திரைப்படம் ஜனவரி 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் ரசிகர்களின் வரவேற்போடு சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் பல கோடி வசூல் செய்த இப்படம் சக்கை போடு போட்டு வருகிறது. 


ஓடிடி-யில் மோதலை தவிர்த்த விஜய் - அஜித்
தியேட்டர்களின் போட்டி போட்டு ரிலீஸ் ஆன துணிவு, வாரிசு திரைப்படங்கள் ஓடிடி ரிலீஸில் மோதலை தவிர்த்துள்ளன. அதன்படி துணிவு படம் 8 ஆம் தேதியும், வாரிசு வடம் பிப்ரவரி 22 ஆம் தேதியும் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


மேலும் படிக்க | RIP: நடிகர் இயக்குநர் கே விஸ்வநாத் அமரரானார்! 93 வயதில் மரணித்த திரைநட்சத்திரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ