HBD STR: பிறந்தநாள் பரிசாக வந்த சிம்புவின் ‘பத்து தல’ பாடல், தெறிக்கும் இசை, ஜொலிக்கும் சிம்பு !!

Happy Birthday Silambarasan TR: சிலம்பரசனின் மாநாடு (2021) மற்றும் வெந்து தனித்து காடு பகுதி I: தி கிண்ட்லிங் (2022) ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் அபார வெற்றி பெற்றதை அடுத்து, பத்து தல படம் மூலம் ஹாட்ரிக் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 3, 2023, 11:06 AM IST
  • நடிகர் சிலம்பரசன் பிறந்தநாள் இன்று.
  • ’பத்து தல’ முதல் சிங்கிள் ‘நம்ம சத்தம்’ வீடியோ சாங் வெளிவந்தது.
  • ரசிகர்கள் பாடலை கொண்டாடி வருகின்றனர்.
HBD STR: பிறந்தநாள் பரிசாக வந்த சிம்புவின் ‘பத்து தல’ பாடல், தெறிக்கும் இசை, ஜொலிக்கும் சிம்பு !!

சிம்பு என சினிமா ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் சிலம்பரசன் டிஆர்-ன் பிறந்தநாள் இன்று. அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பெருநாள் வந்துவிட்டது. இன்று (பிப்ரவரி 3) அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களுக்கான ஒரு பெரிய பரிசையும் சிலம்பரசன் அளித்துள்ளார். சிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த சிம்புவின் ஆக்‌ஷன் படமான ‘பத்து தல’ திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் சிங்கிள் 'நம்ம சத்தம்' வெளியிடப்பட்டுள்ளது.

கேங்க்ஸ்டர் படமான இது உலகம் முழுதும் மார்ச் மாதம் 30 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. அதற்கு முன்னதாக, படத்தில் சில அம்சங்களும் ரசிகர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளன. இப்படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’ புகழ் ஓபேலி என். கிருஷ்ணா இயக்கியுள்ளார், ஜெயந்திலால் கடாவின் பென் ஸ்டுடியோஸ் பேனருடன் கே.இ.ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் படத்தை தயாரித்துள்ளனர். அகாடமி விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான் பத்து தல படத்துக்கு இசையமைத்துள்ளார். அதனுடன் யோகி சேகருடன் இணைந்து 'நம்ம சத்தம்' பாடலையும் அவர் பாடியுள்ளார். இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார். நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் இப்பாடலுக்கு நடன பயிற்கி பொறுப்பை ஏற்றுள்ளார். 

பத்து தல முதல் சிங்கிள் வீடியோவில், கோவில் பின்னணியில் நடனமாடும் சிம்புவை காட்சிகளில் காண முடிகின்றது. பாடலின் மூடை ஏ.ஆர் ரஹ்மானின் சக்தி வாய்ந்த மற்றும் தனித்துவமான குரல் மேலும் அதிகரிக்கிறது. எஸ்டிஆர் ஏஜிஆர் என்ற டான் வேடத்தில் நடிக்கிறார் என்றும், கவுதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும் தகவல் வெளியானதில் இருந்தே படத்தை பற்றிய சலசலப்பும் எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. 

மேலும் படிக்க | Thalapathy 67 - Code Red: சொன்னதை செய்த லோகேஷ்... 100% தளபதி படம்

'நம்ம சத்தம்' பாடல் வீடியோவில், ஏ.ஆர். ரஹ்மானின் துடிக்கவைக்கும் இசைக்கு, சிலம்பரசனுடன் இணைந்து கெளதம் கார்த்திக்கின் நடன அசைவுகளையும் மலையாள நடிகை அனு சித்தாராவையும் காண முடிகின்றது. 

பத்து தலையில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக்கின் கதாபாத்திரங்கள் நர்த்தனின் இயக்கத்தில் டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் ஸ்ரீமுரளி நடித்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த கன்னட திரைப்படமான முஃப்தியை அடிப்படையாகக் கொண்டதாக கூறப்படுகிறது. கன்னட பிளாக்பஸ்டரின் தமிழ் பதிப்பில் மற்ற சில நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அவர்களில் ப்ரியா பவானி ஷங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், கலையரசன், டீஜே அருணாசலம், ரெடின் கிங்ஸ்லி, மனுஷ்யபுத்திரன் ஆகியோர் அடங்குவர். 
சிலம்பரசனின் மாநாடு (2021) மற்றும் வெந்து தனித்து காடு பகுதி I: தி கிண்ட்லிங் (2022) ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் அபார வெற்றி பெற்றதை அடுத்து, பத்து தல படம் மூலம் ஹாட்ரிக் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

‘பத்து தல’ படத்தின் 'நம்ம சத்தம்' பாடல் வீடியோவில் எஸ்.ரி.ஆர்- இன் அதிரடியை இங்கே காணலாம்: 

தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகர் சிலம்பரசனுக்கு ஜீ நியூஸ் தமிழ் சார்பில் பிறந்தநாள் நல்வாத்துக்கள்!!

மேலும் படிக்க | அப்போ அனுஷ்கா.. இப்போ நயன்தாரா..! பாலியல் அழைப்பு குறித்து ஓபனாக பேசிய நயன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

More Stories

Trending News