அஜித்குமார் கடைசியாக ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படமானது ரசிகர்களிடம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வசூல் ரீதியாக படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பு இல்லை. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.


சதுரங்க வேட்டை, தீரன் போன்ற தரமான படங்களை இயக்கிய வினோத்திடமிருந்து இதுபோன்றொரு படத்தை எதிர்பார்க்கவில்லை என்று சமூக வலைதளங்களில் வெளிப்படையாகவே சிலர் கூறினர்.



இப்படிப்பட்ட சூழலில் அஜித்தின் 61ஆவது படத்தையும் வினோத்தே மீண்டும் இயக்குகிறார். இதனையும் போனிகபூரே தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, வீரா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சமீபத்தில்தான் வீரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டன.


இரட்டை வேடங்களில் அஜித் நடிக்கும் இப்படமானது வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. க்ரைம் ஜானர் படங்கள் வினோத்தின் பலம் என்பதால் இப்படத்தில் விட்டதை வினோத் பிடிப்பார் என பரவலான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் மும்முரமாக நடந்துவருகிறது. விரைவில் படப்பிடிப்பை முடித்து அப்டேட்களை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


 



இந்நிலையில் தொடர்ந்து ஏகே 61 படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்த அஜித் தற்போது சிறிய பிரேக் எடுத்து சொந்த காரணங்களுக்காக லண்டனுக்கு சென்றிருக்கிறார்.


மேலும் படிக்க | ஜூன் 24ம் தேதி வெளியாகும் மாமனிதன் திரைப்படம்: நடிகை காயத்ரிக்கு தேசிய விருது நிச்சயம்


அங்கு சென்ற அவர், லண்டனில் இருக்கும் பைக் ரேசர்ஸ் குழுவினருடன் தனது BMW பைக்கில் பைக் ரைட் சென்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பைக்குடனும், பைக் ரேசர்களுடனுடம் அஜித் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


மேலும் படிக்க | ரீ ரெக்கார்டிங்கிற்கே கூப்டல இது என்ன நியாயம்- இளையராஜா மீது இயக்குநரின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR