நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரை போற்று' மெகா வெற்றி பெற்ற திரைப்படம் ஆகும். இதில் அபர்ணா முரளி, கருணாஸ், ஊர்வசி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். சிம்ப்ளிஃப்லி டெக்கான் நிறுவனர் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் சூரரை போற்று படம் தற்போது இந்தியில் ரீமேக்காக உள்ளது. இதற்கான பூஜை நேற்றைய தினம் மும்பையில் போடப்பட்டது. பாலாவின் சூர்யா41 படத்தின் சூட்டிங்கில் பங்கேற்றிருந்த சூர்யா திடீரென நேற்று மும்பைக்கு சென்றார். இதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. 


மேலும் படிக்க | கேஜிஎப் சக்சஸ் பார்ட்டியில் அஜித்தின் பஞ்ச் வசனம்


 



 


அந்த வகையில் தற்போது சுதா கொங்கரா இயக்கவுள்ள இந்தப் படத்தில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கவுள்ளார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. மேலும் இந்த படத்தை சூர்யா தனது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்ப்பில் தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பூஜை வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்த படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாகியுள்ளார் ராதிகா மதன் நடிக்க உள்ளார். இப்படத்தை அபுண்டண்டியா நிறுவனத்துடன் இணைந்து சூர்யா - ஜோதிகாவின் 2 டி நிறுவனம் தயாரிக்கிறது. அந்நிறுவனம் தயாரிக்கும் முதல் இந்தி படம் இதுவாகும். இதன்மூலம் பாலிவுட்டில் தயாரிப்பாளராக அறிமுகமாகி உள்ளார் சூர்யா. மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | கோப்ரா படத்துக்கு இப்போதே கிடைத்த அங்கீகாரம் - படக்குழு மகிழ்ச்சி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR