கேஜிஎப் சக்சஸ் பார்ட்டியில் அஜித்தின் பஞ்ச் வசனம்

கேஜிஎப் 2 படத்தின் சக்சஸ் பார்டியை ஹீரோ யாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கோவாவில் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 25, 2022, 12:03 PM IST
  • வசூல் மழையில் கேஜிஎப் 2 திரைப்படம்
  • 900 ஆயிரம் கோடியை வசூலித்திருப்பதாக தகவல்
  • கோவாவில் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம்
கேஜிஎப் சக்சஸ் பார்ட்டியில் அஜித்தின் பஞ்ச் வசனம் title=

நடிகர் யாஷ் நடிப்பில் இந்த மாதம் 14 ஆம் தேதி வெளியான படம் கேஜிஎப் 2. பீஸ்ட் படம் ரிலீஸான பிறகு வெளியான இப்படம் பாக்ஸ் ஆஃபீஸை ஆக்கிரமித்தது. தமிழில், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கேஜிஎப் 2 படம் வசூல் வேட்டை நடத்தியது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டில் பாக்ஸ் ஆஃபீஸை பதம்பார்த்து வருகிறது. படம் ரிலீஸாகி இரண்டு வாரங்களைக் கடந்த பிறகும் பல ஊர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

மேலும் படிக்க | ’தல’ பிறந்தநாளுக்காக ஸ்பெஷல் ஷோ செய்யும் தொலைக்காட்சி

பாலிவுட்டில் மட்டும் சுமார் 350 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக கூறப்படும் நிலையில், ஒட்டுமொத்தமாக படத்தின் வசூல் ஆயிரம் கோடியை நெருங்கிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லேட்டஸ்டாக வெளியாகியிருக்கும் தகவல்படி, கேஜிஎப் 2 900 கோடி ரூபாய்க்கும் வசூலித்துவிட்டதாம். இந்த வார இறுதிக்குள் ஆயிரம் கோடியைக் கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உற்சாகத்தில் இருக்கும் படக்குழு, சக்ஸஸ் பார்டியைக் கொண்டாடியுள்ளது.

ஹீரோ நடிகர் யாஷ் மற்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் உள்ளிட்ட படக்குழுவினர் கோவாவில் முகாமிட்டு, கேஜிஎப் 2 வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். படத்தின் வெற்றிக்காக குழுவினருடன் இணைந்து யாஷ் கேக் வெட்டினார். அதில், "Its just beginning" என எழுதப்பட்டுள்ளது. இதனால், கேஜிஎப் 3 படம் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேஜிஎப் 2 படத்திலேயே மூன்றாம் பாகத்துக்கான அறிவிப்பையும் படக்குழு வைத்திருப்பதால், ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். கேஜிஎப் மூன்றாம் பாகத்துக்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News