Allu Arjun Pushpa 2: The Rule Release Date: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்து உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பிய திரைப்படம் "புஷ்பா தி ரைஸ்". செம்மர கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த, திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் (Allu Arjun) இதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) நடித்திருந்தார். வில்லனாக சுனிலும், முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரியாக ஃபஹத் ஃபாசிலும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்ததோ, அதே அளவிற்கு இப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இதனுடன் புஷ்பா 1 படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்திருந்தது.


மேலும் படிக்க | ரஜினி முதல் விஜய் சேதுபதி வரை.. அர்ஜுன் மகள் ரிஷப்ஷனில் கலந்துகொண்ட பிரபலங்களின் போட்டோஸ்


கொரோனா பீக்கில் இருந்த சமயத்தில் வெளியான 'புஷ்பா தி ரைஸ்' படம் 350 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருந்தது. இந்த படம் தெலுங்கில் மட்டுமின்றி தமிழ், மலையாளம், இந்தி, கன்னடத்திலும் மாபெரும் வெற்றியை பெற்றது. தற்போது 'புஷ்பா' படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது.


‘புஷ்பா தி ரூல்’ (Pushpa 2 The Rule) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படம், வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இறுதிகட்டப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக தற்போது திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இந்த படம் வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக பிரத்யேக போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளது.




முன்னதாக இந்த படத்தின் டீசர், பாடல் உள்ளிட்டவை சமீபத்தில் வெளியாகி மாஸ் காட்டிய சூழலில் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். திரைப்படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில் இரண்டாம் பாகத்தில் இந்த முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Paruvu Web Series OTT Release: பரபரப்பான த்ரில்லர் 'பருவு' தொடர் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ