பரபரப்பான த்ரில்லர் 'பருவு' தொடர் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் தெரியுமா?

Paruvu Web Series OTT Release : பெரும் சதிகளுக்குப் பின்னால்,  மறுக்கப்படும் காதல் கதை "பருவு" தொடரை எந்த தளத்டில் பார்க்கலாம்?   

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : Jun 17, 2024, 01:16 PM IST
  • பரபரப்பான த்ரில்லர் தொடர், பருவு
  • ஓடிடியில் வெளியானது!
  • எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?
பரபரப்பான த்ரில்லர் 'பருவு' தொடர் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் தெரியுமா?  title=

Paruvu Web Series OTT Release : சித்தார்த் நாயுடு மற்றும் வட்லபதி ராஜசேகர் ஆகியோர் இயக்கியுள்ளனர்.  இந்த சீரிஸை, சுஷ்மிதா கொனிடேலா தயாரித்துள்ளார்.  பவன் சதினேனி ஷோ ரன்னராக பணியாற்றியுள்ளார். பருவு சீரிஸில் நிவேதா பெத்துராஜ், நரேஷ் அகஸ்தியா, நாகபாபு மற்றும் பிரனீதா பட்நாயக் ஆகியோர் நடித்துள்ளனர்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ZEE5 ஒரிஜினல் தெலுங்கு க்ரைம் த்ரில்லர் சீரிஸான ​​"பருவு" சீரிஸை  பெருமையுடன் அறிவித்துள்ளது. ஷோ ரன்னராக பவன் சதினேனி பணியாற்ற, நம்பிக்கைக்குரிய அறிமுக இயக்குநர்களான சித்தார்த் நாயுடு மற்றும் வட்லபதி ராஜசேகர் ஆகியோர் இந்த சீரிஸை இயக்கியுள்ளனர்.  

சுஷ்மிதா கொனிடேலா தயாரித்துள்ள இந்த சீரிஸை, தலைசிறந்த எழுத்தாளரான சித்தார்த் நாயுடு எழுதியுள்ளார். இந்த பரபரப்பான திரில்லர் சீரிஸில்  நிவேதா பெத்துராஜ், நரேஷ் அகஸ்தியா, நாகபாபு மற்றும் பிரனீதா பட்நாயக் ஆகியோர் நடித்துள்ளனர்.  கவுரவக் கொலைகளுக்குப் பலியாகிவிடுமோ என்ற அச்சத்தில், ஒரு தம்பதியினர் தங்களையும் தங்கள் காதலையும்  காத்துக் கொள்ளப் போராடுகிறார்கள், சதிகளைத் தாண்டி அவர்கள் வெற்றி பெறுவார்களா, அல்லது சாதி வேறுபாடுகள் அவர்களைப் பிரிக்குமா? 

முதல் எபிசோட் இலவசம்!

பாரம்பரியத்தைக் கடக்கும் உலகில், குடும்பங்கள் தங்கள் ஜாதியைக் காப்பாற்ற முனைந்தால் என்னவாகும் என்பது தான் இந்த சீரிஸின் கதை . ZEE5 இல் "பருவு" பிரத்தியேகமாகத் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் ஸ்ட்ரீமாகிறது. அன்பு, விசுவாசம் மற்றும் மரியாதையைப் பாதுகாக்க ஒருவர் எவ்வளவு தூரத்துக்குச் செல்வார்கள் என்பதைப் பற்றியும், மனிதர்களின் தெரியாத  பக்கங்களை இந்த சீரிஸ் வெளிச்சமிட்டுக் காட்டும். ZEE5 இல் முதல் எபிஸோடை  இலவசமாகப் பாருங்கள்.

Aranmanai 4 OTT : அரண்மனை 4 படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்போது பார்ப்பது?

கதை என்ன? 

காட்டுத்தனமான சாதி அரசியலால் ஆளப்படும் உலகில், சண்டையிடும் சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வதன் மூலம் சமூக விதிமுறைகளை மீறத் துணியும் ஒரு ஜோடியின் கதையைச் சொல்கிறது பருவு. 

அவர்களது குடும்பத்தினரால் நிராகரிக்கப்பட்ட நிலையில் அந்த ஜோடி, குடும்பத்தில் ஏற்படும் ஒரு மரணம் காரணமாக  ஒரு நாள் தங்கள் ஊருக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்களைப் பிரிக்கும் நோக்கில் ஒரு மோசமான திட்டம் தீட்டப்பட்டுள்ளதை அறியும் இந்த ஜோடி, உயிர்வாழ்வதற்கான போராட்டத்தில், அந்த திட்டத்தைத் தோற்கடிக்க நினைக்கும்போது,  அவர்கள் வேட்டையாடப்படும் ஒரு நரகத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். பாரம்பரியம், கலாச்சாரம், ஜாதிய அடுக்குகள், குடும்ப மரியாதை என சமூகத்தின் பல அடுக்குகளைத் தாண்டி, தங்களின் காதலில் அவர்கள் வெற்றி பெற முடிந்ததா? என்பதை, இந்த சீரிஸ் பல பரபரப்பான திருப்பங்களுடன், பார்வையாளர்களைக் கவரும் வகையில் சொல்கிறது. 

ZEE5 இல் "பருவு" இன்றிலிருந்து தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமாகிறது.  ZEE5 இல் முதல் எபிஸோடை இலவசமாகப் பார்க்கலாம். இந்த தொடர், கடந்த 14ஆம் தேதியே ஓடிடியில் வெளியாகிவிட்டது. 

மேலும் படிக்க | OTT Releases : ஒரே நாளில் ஓஹோன்னு ஓடிடி ரிலீஸ்! எந்த படத்தை, எந்த தளத்தில் பார்ப்பது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News