இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அன்னம் அமுதா செந்திலுடன் வந்து குலதெய்வ கோவிலில் பூஜை செய்ய மாயா அங்கு வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது, மாயா சத்தம் போட்டு அங்குள்ளவர்களை அழைத்து நான் தான் இவங்க மருமக என்னை விட்டுட்டு இவங்க பூஜை பண்றாங்க, யாருமே இந்த அநியாயத்தை கேக்க மாட்டீங்களா என சொல்ல பஞ்சாயத்து பெரியவர் அன்னலட்சுமி நீங்க பண்றது நியாயம் இல்ல என சொல்கிறார்.


அடுத்ததாக கோவிலில் சின்ன பெண்ணுக்கு சாமி வந்து பேச்சி அம்மன் சிலை வெள்ளம் வந்து அடிச்சிட்டு போயிருச்சு, என்னை கண்டுபிடிச்சி கோயில்ல விளக்கேத்துறவங்க தான் உண்மையானவங்க, இன்னைக்கு சாயந்திரத்துக்குள்ள சிலை வந்து சேரனும்,  இது தான் பேச்சியம்மனோட தீர்ப்பு என சொல்ல அமுதா தான் அந்த சிலையை தேடி கண்டுபிடித்து நான் தான் உண்மையான மருமகன்னு நிரூபிக்கிறேன் என சொல்ல மாயாவும் தானும் சிலையை கண்டுபிடித்து கொண்டு வருவதாக சொல்கிறாள்.


மேலும் படிக்க | டிராமா போடும் தீபா.. நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!


இதனால் உமா மாயாவை நீ எப்படி சிலையை கண்டுபிடிப்ப என சொல்லி திட்டிக் கொண்டிருக்க, பழனி அதுக்கு நான் ஒரு ஐடியா சொல்றேன், நாம ஒரு சிலையை கொண்டு வந்து இது தான் காணாம போன சிலைன்னு சொல்லுவோம் என பிளான் போடுகிறான். அடுத்து அன்னலட்சுமி ரொம்ப வருஷமா தேடிகிட்டுதான் இருக்காங்க, நீ எப்படிம்மா கண்டுபிடிப்ப என வருத்தத்துடன் சொல்ல அமுதா அய்யனாரை கும்பிட்டுக் கொண்டிருக்க, அமுதா என சத்தம் கேக்க அமுதா திரும்ப கதிரேசன் சின்ன பையனா அமுதா முன் தோன்றுகிறான்.



மேலும் உனக்கு சோதனைகள் வந்துகிட்டே தான் இருக்கும், அதுக்காக கலங்கிராத, இந்த மாமா உன்னை கைவிட மாட்டேன் என்பது.அந்த சிலை பின்னாடி இருக்குற காட்டுக்குள்ள தான் இருக்கு ஒரு விளக்கை எடுத்துகிட்டு காட்டுக்குள்ள போ, எந்த இடத்து கிட்ட அந்த விளக்கு எரியுதோ அங்க தான் அந்த சிலை இருக்குன்னு அர்த்தம் என சொல்லிவிட்டு மறைய அமுதா அன்னலட்சுமியிடம் விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்க, உமா அதை ஒட்டு கேட்கிறாள். 


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலக்ஷ்மியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள். 


மேலும் படிக்க | தமிழ்நாட்டின் டாப் 5 டிவி தொடர்கள்! எதிர்நீச்சல் சீரியலுக்கு எந்த இடம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ