அமுதாவும் அன்னலட்சுமியும்: படிக்க கிளம்பும் அமுதா.. கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அன்னம்

Amudhavum Annalakshmiyum: படிக்க கிளம்பும் அமுதா.. கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அன்னம் - அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 11, 2023, 11:45 AM IST
  • அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது?
  • அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
  • இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
அமுதாவும் அன்னலட்சுமியும்: படிக்க கிளம்பும் அமுதா.. கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அன்னம் title=

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். அமுதா தேர்வு எழுதிய பேப்பர் கோர்ட்டில் மீண்டும் திருத்தப்பட்ட நிலையில் அமுதா பாஸ் என தெரிய வந்தது.

மேலும் படிக்க | பிரபல திரைப்பட தயாரிப்பாளர் உயிரிழப்பு..! முதல்வர் உள்பட பலர் இரங்கல்…!

இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் அமுதா தான் பாஸ் ஆனதை கதிரேசன் போட்டோ முன் நின்று உங்க ஆசிர்வாதம் பண்ண சொல்கிறாள். 

அடுத்ததாக செந்தில் அமுதாவிடம் மத்தவங்க உன்னை இளக்காரமா நினைச்ச மாதிரி நானும் உன்னை நினைச்சிட்டேன், என்னை மன்னிச்சிரு என சொல்ல அமுதா அவனிடம் நீங்க படிக்கும் போது நான் உங்களை நம்புன மாதிரி நீங்க என்னை நம்பலேல்ல என சொல்ல, இனிமே நான் எப்பவுமே உனக்கு சப்போர்ட்டா இருப்பேன் என சொல்கிறான். 

அமுதா அவனிடம் முத தடவை விழுந்து எழும் போது தான் பயமா இருக்கும், யாராவது கை குடுக்க மாட்டாங்களான்னு தோணும், ரெண்டு மூணு தடவை விழுந்து எழுந்தா யாரோட உதவியும் தேவைப்படாது என சொல்லிவிட்டு நகர்கிறாள். 

செந்தில் கோயிலுக்கு சென்று பிள்ளையாரிடம் என் பொண்டாட்டியை புரிஞ்சுக்காம அவ ஆசைக்கு எதிரா நின்னது தப்பு தான், எனக்கே என்னை நினைச்சா அசிங்கமா இருக்கு என வருந்துகிறான். 

அடுத்ததாக சிதம்பரம்,செல்வா செந்தில் வீட்டிற்கு வர வடிவேலு சிதம்பரத்தை பார்த்தவுடன் வீட்டை விட்டு வெளியே போக சொல்ல பின்னால் செல்வா வர, அவரைப் பார்த்ததும் வாங்க மாமா என சொல்லி பம்முகிறான். அடுத்ததாக சிதம்பரம் அமுதாவை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போக சொன்னதாக சொல்ல, பரமு அவரை நக்கல் செய்ய அமுதா ஸ்கூல் யூனிபார்ம் அணிந்து வர, அன்னம் யூனிபார்மை கழட்டி போட்டுட்டு வீட்டு வேலை பார்க்குற வழியை பாரு என சத்தம் போடுகிறாள். 

பின்னர் சிதம்பரம் உங்க பையன் கல்யாணம் பண்ண பிறகு காலேஜுக்கு போய் படிச்சாரு அப்ப உங்க குடும்ப மானம் போகலையா என கேட்க என் மக தன்னையே வருத்தி உங்க குடும்ப கவுரத்தை மீட்டு குடுத்துருக்கா, அவ படிக்கனும்னு சொல்லும் போது ஏன் தடுக்குறீங்க என கேள்வி கேட்க செல்வா அன்னத்திடம் பொம்பளை படிக்க கூடாதா, அவ வீட்டுக்கள்ளேயே முடங்கி கிடக்கனுமா என கேள்வி கேட்க அன்னம் சிதம்பரத்திடம் இப்ப என்ன உங்க மக படிக்கணும் அம்புட்டு தான என சர்க்கரையை எடுத்து சாப்பிட்டு விட்டு போக சொல்கிறாள். 

பிறகு அமுதா கிளம்ப, அன்னம் நீங்க உங்க மக படிக்கனும்னு நினைக்கிறிங்க அதுல நான் தலையிட மாட்டேன், ஆனா இப்ப இவன் என் மருமக, இவ படிக்கிறதுல எனக்கு விருப்பம் இல்ல, என் மகனை அத்துவிட்டுட்டு உங்க மகளை கூட்டிட்டு போய் படிக்க வைங்க என சொல்ல சிதம்பரம், செல்வா ஷாக் ஆகின்றனர். 

சிதம்பரம் கோபத்துடன் அன்னத்தை பார்த்து கை ஓங்க அன்னம் கோபத்துடன் நல்லா அடிங்க அடிங்க என கத்த அமுதா சிதம்பரத்தை கிளம்ப சொல்கிறாள். 

அன்னம் அமுதாவிடம் நீயும் உன் அப்புச்சியும் சேர்ந்து நாடகமா போடுறீங்க என கோபத்துடன் அமுதாவை வெளியே பிடித்து தள்ளி சிதம்பரத்திடம் உங்க பொண்ணை கூட்டிட்டு போங்க என சொல்ல செல்வா அமுதாவை காரில் ஏற சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது

அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.

மேலும் படிக்க | Thalapathy 68 அப்டேட்! 21 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் நடிக்கும் பிரபல ஹீரோ?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News