Amudhavum Annalakshmiyum Serial Today Episode: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர், அமுதாவும் அன்னலட்சுமியும்.  இந்த சீரியலின் இன்றைய எபிசோட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய கரஸ்பாண்டட்


இன்றைய எபிசோடில் ஊர் ஆட்கள் குழந்தைகளை படிக்க வைக்க பணம் இல்லாதது குறித்து சொல்ல அமுதா அதை தான் பார்த்துக் கொள்வதாக சொல்லிவிட்டு கரஸ்பாண்டண்டாக பள்ளிக்கு கிளம்புகிறாள். பிறகு மாணிக்கம் அன்னமிற்கு மாலை அணிவித்து மகிழ்ச்சி அடைகிறான்.


உமாவுக்கு அமுதா எச்சரிக்கை


பள்ளிக்கு வந்து கரஸாக சீட்டில் அமுதா அமர, அவளுக்கு செகரட்டரியாக ஒருவர் வருகிறார். உமா ஆசிரியராக சேருவதற்கான அப்பாயிட்ன்மெண்ட் ஆர்டருடன் வந்து அமுதாவிடம்,'நான் வந்துட்டேன் இனிமே உன்னால எதுவும் செய்ய முடியாது' என சொல்ல, 'நம்மளோட சண்டை எல்லாம் வெளில வச்சுக்கலாம். இங்க நீ ஒரு நல்ல டீச்சரா நடந்துக்கோ, அப்படி இல்லேன்னா நான் உன் மேல நடவடிக்கை எடுப்பேன்' என அமுதா எச்சரிக்கிறாள்.



மேலும் படிக்க | என்ட்ரி கொடுக்கும் புது கேரக்டர்..! தெய்வம் தந்த பூவே சீரியல் அப்டேட்!


செந்திலின் ஐடியா


அதன் பிறகு செந்திலும் அப்பாயின்மெண்ட் ஆர்டரை அமுதாவிடம் இருந்து வாங்கி கொண்டு அமுதாவை மேடம் என சொல்லி மரியாதையாக பேசுவது போல கிண்டலடிக்கிறான். அதனை தொடர்ந்து செந்தில் 'மாணவர்கள் புக்கை எல்லாம் வெளில வைங்க, யாரும் புக்கை உள்ள கொண்டு வரக் கூடாது' என சொல்ல, மாணவர்கள் சந்தோஷப்படுகின்றனர். இதனை அமுதா ஜன்னல் வழியாக பார்த்து ரசிக்கிறாள்.


இங்கிலீஷ் தெரியுமா?


மேலும் இறுதியாக செகரட்டரி சர்குலரை ஆங்கிலத்தில் NCC CAMP குறித்து படிக்க, அமுதா அதை தமிழில் சொல்லுமாறு சொல்கிறாள். பின்னர் நோட்டீஸ் போர்டில் சர்குலரை ஒட்ட, 'உனக்கு இங்கிலீஷ் தெரியுமா' என உமா நக்கல் அடிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.



முந்தைய எபிசோட்


இந்த தொடரின் முந்தைய எபிசோடில், வழக்கில், அமுதா வெற்றி பெற்றதாக அறிவித்து குமரேஷனுக்கு 6 மாத காலம் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். அமுதாவை சேரில் ஜட்ஜ் அமர வைக்க, அவள் கண்ணீருடன் அனைவருக்கும் நன்றி கூறினார். அறையில் கதிரேசன் புகைப்படத்தை மாட்டி, நான் என்னுடைய கடமையை செய்வேன் என உறுதி மொழி எடுக்கிறாள். 


மேலும் தனக்கு வரும் சம்பள பணத்தை தான் வாங்கப் போவதில்லை என்றும் ஏழைக் குழந்தைகளின் படிப்புக்காக செலவிடப்போவதாகவும் கூறினார். அமுதா அடுத்த நாள் கரசாக பள்ளிக்கு கிளம்ப ஊர் ஆட்கள் குழந்தைகளை படிக்க வைக்க பணம் இல்லாதது பற்றி சொல்ல அமுதா அதை தான் பார்த்துக் கொள்வதாக சொல்கிறாள். 


எங்கு பார்ப்பது?


அமுதவும் அன்னலட்சுமியும் தொடர், 2022ஆம் ஆண்டில் இருந்தது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, ZEE5 டிஜிட்டல் தளத்திலும் இந்த தொடர் ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.


மேலும் படிக்க | Kushi Movie: 23 ஆண்டுகளை கடந்தும் பசுமையான காதலாக மனதில் பதிந்த குஷி திரைப்படம்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ