என்ட்ரி கொடுக்கும் புது கேரக்டர்..! தெய்வம் தந்த பூவே சீரியல் அப்டேட்!

வினய் மித்ராவை விட்டு பிரிந்து வந்த நிலையில் அவனை தேடி வந்த மித்ராவை வினய்யின் சித்தி அவளது வீட்டில் தங்க வைக்க, பரபரப்பாக நகர்கிறது தெய்வம் தந்த பூவே சீரியல்.  

Written by - RK Spark | Last Updated : May 19, 2023, 11:24 AM IST
  • தெய்வம் தந்த பூவே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
  • திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகிறது.
  • தினமும் மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
என்ட்ரி கொடுக்கும் புது கேரக்டர்..! தெய்வம் தந்த பூவே சீரியல் அப்டேட்! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தெய்வம் தந்த பூவே. இதற்கு முந்தைய எபிசோடுகளில், வினய்யை கார்த்திக் கொல்ல நினைத்த நிலையில் அவன் தான் இதற்கெல்லாம் காரணம் என போலீஸ் ஆதாரத்துடன் கார்த்திக்கை கைது செய்தது. அதாவது மித்ரா வினய் சொன்னனது அத்தனையும் உண்மை தான் என்பதை புரிந்து கொள்ள வினய் நீ எப்பவும் என்னை நம்ப மாட்ட, உனக்கு எப்போதும் சந்தேகம் தான் என கோப்படுகிறான். அதோடு நிறுத்தால் இனிமேலும் நமக்கு செட் ஆகாது, நம்ம பையனை நல்லபடியா பார்த்துக்க என சொல்லி சென்னை கிளம்பி வர வினய்யின் மாமா மித்ராவை சென்னைக்கு அழைத்து வருகிறான். இதை பார்த்த வினய் மித்ராவை திட்டி வெளியே அனுப்புகிறான். இதனால் வீட்டை விட்டு வெளியேறும் மித்ராவுக்கு வினய்யின் சித்தப்பா சித்தி அடைக்கலம் தருகின்றனர். 

மேலும் படிக்க | Aishwarya Rajesh: “ராஷ்மிகாவை நான் குறைகூறவில்லை..” புஷ்பா பட ஸ்ரீவள்ளி சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா விளக்கம்!

இன்றைய எபிசோடில் வினய் மித்ராவை விட்டு பிரிந்து வந்த நிலையில் அவனை தேடி வந்த மித்ராவை வினய்யின் சித்தி அவளது வீட்டில் தங்க வைத்துள்ள நிலையில் வரும் நாட்களில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது, வினய் வீட்டுக்கு அவர்களது உறவினர் ஒருவர் வந்து தங்களுக்கு 80-வது கல்யாணம் குடும்பத்தோடு எல்லாரும் வரணும் என அழைப்பு விடுக்க வினய்யின் சித்தி மித்ராவை கூட்டி வந்து அவள் இந்த வீட்டில் தான் இருப்பாள் என சொல்கிறாள். பிறகு மொத்த பேரும் சேர்ந்து உறவினரின் 80-வது கல்யாணத்துக்காக ஊருக்கு வர வினய் மற்றும் மித்ரா ஒரே ரூமில் தங்க வேண்டிய சூழ்நிலை உருவாக வினய் மித்ராவிடம் இதையே காரணம் காட்டி என்கூட சேர்ந்துடலாம்னு நினைக்காதே, அது நடக்காது என சண்டையிட இதை தாத்தா கேட்டு விடுகிறார். 

serial

அதோடு அவர் வாசுகியிடம் விசயத்தை கேட்க அவளும் நடந்த விசயங்களை சொல்ல தாத்தா இந்த கல்யாணம் முடியறதுக்குள்ள அவங்களை நான் சேர்த்து வைக்கிறேன் என சத்தியம் செய்து கொடுக்கிறார். பிறகு நடக்க போவது என்ன? இருவரையும் சேர்த்து வைக்க தாத்தா என்னவெல்லாம் செய்ய போகிறார் என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே தெய்வம் தந்த பூவே சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | Aishwarya Rajesh: “ராஷ்மிகாவை நான் குறைகூறவில்லை..” புஷ்பா பட ஸ்ரீவள்ளி சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா விளக்கம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News