ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செத்து போனதாக நினைத்த செந்தில் மாஸாக வந்து இறங்கி ஆசிரியராக பொறுப்பேற்கிறான்.  கரஸ் இரண்டு தரப்பும் வாத்தியார் இருப்பதால், கரஸ் பொறுப்புக்கு தேர்தல் நடத்தப்படும் என சொல்கிறார்‌. பழனி தான் நிற்பதாக சொல்ல செந்தில் எங்க குடும்பத்துலேர்ந்து அமுதா நிற்பதாக சொல்கிறான். பிறகு அன்னத்தை நிற்க சொல்லி அமுதா சொல்ல, அன்னம் எனக்கு அந்த தகுதி இல்ல, ஒரு வாத்தியாரை உருவாக்குன தகுதி அமுதாவுக்கு இருப்பதாக சொல்கிறாள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | இயக்குனருக்கும் மகேஷ் பாபுவுக்கும் இடையே மோதல்? சிக்கலில் SSMB 28!


 


அடுத்த வாரம் எலக்‌ஷன் என சொல்ல அமுதா உமாவிடம் நீ வெறும் வாயால் தான் சண்டை போடுவ, நாங்க எதை செய்யனுமோ அதை செய்வோம் என சொல்கிறாள். அதன் பிறகு செந்தில், அன்னம், மாணிக்கம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறான். அன்னம் அவனிடம் ரெண்டு வருஷம் உன் பொண்டாட்டியை பிரிஞ்சி எங்களை பிரிஞ்சி இவ்வளவு நாள் இருந்தியே பெரிய விஷயம்யா என நெகிழ்கிறாள்.



அதன் பிறகு அமுதா தனியாக நின்று கொண்டிருக்க, செந்தில் அங்கு வருகிறான். இருவரும் ஒருவரை ஒருவர் நெகிழ்ச்சியுடன் பார்த்து அமுதா கண் கலங்குகிறாள். நான் கண்ட கனவு நிறைவேறிடுச்சு என சொல்லி அமுதா அவனது தோளில் சாய்கிறாள்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | 20க்கும் மேற்பட்ட படங்கள்..2026-ல் மாஸான அறிவிப்பு: சரத்குமார் பரபரப்பு பேட்டி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ