தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பள்ளியில் கேண்டீன் காண்ட்ராக்டுக்காக சாம்பிள் உணவு டெஸ்ட் நடக்க இளங்கோவும் கேண்டீன் கான்டராக்ட் எடுப்பதற்காக அங்கு வந்திருக்கிறான். அவன் அமுதாவிடம் உனக்கு இது தர்மசங்கடமா ஆயிரும்னா நான் விலகிக்கிறேன் என சொல்கிறான். 


மேலும் படிக்க | பல கோடிகளுக்கு அதிபதி... ஆனாலும் சரத்பாபுவின் கடைசி ஆசை நிறைவேறவில்லையா? - முழு விவரம்


இதை கண்ட வடிவேலு அவளிடம் எனக்கு குடுக்காம இருக்குறதுக்காக உங்க அண்ணனை வரச் சொல்லிட்டியா, ஒழுங்கு மரியாதையா எனக்கு இந்த காண்ட்ராக்டை கொடு என்று கேட்க அமுதா கமிட்டியிடம் இதுல நான் முடிவு எடுக்க முடியாது, காரணம் ஒருத்தர் என் அண்ணன், இன்னொருத்தர் என் மச்சினன் அதனால யாரு நல்லா பண்ணிருக்காங்களோ அவங்களுக்கே குடுத்திருங்க என சொல்லி விட்டு சென்று விடுகிறாள்.


இதனையடுத்து கமிட்டி சாப்பாட்டை டெஸ்ட் செய்ய வடிவேலு குடித்து விட்டு வந்திருக்க, கமிட்டியினர் என்னப்பா குடிச்சிட்டு வந்திருக்க என கேக்க அவன் திமிராக பேசுகிறான். கமிட்டியினர் வடிவேலு குடித்த விஷயத்தை சொல்ல அவனை வெளியே அனுப்புமாறு அமுதா சொல்லி விடுகிறாள். 


இதனையடுத்து கமிட்டி இளங்கோவுக்கு காண்டிராக்டை கொடுக்க முடிவு செய்ய, அமுதா வேண்டாம் சென்று சொல்ல, கமிட்டியினர் நாங்க உங்க அண்ணங்குறதுக்காக இதை கொடுக்கல, அவர் செஞ்ச சாம்பிள் நன்றாக இருந்ததாக சொல்கின்றனர்.


இங்கே வடிவேலு வீட்டில் தனக்கு காண்ட்ராக்ட் கிடைக்காததால் பிரச்சனை பண்ணுகிறான். அமுதா அவ அண்ணனுக்கே கொடுத்து விட்டதாக சொல்ல அன்னம் அமுதாவிடம் வடிவேலுக்கு காண்ட்ராக்ட் கொடுக்காதற்காக வருத்தப்படுகிறாள். வடிவேலுவை திட்டுகிறாள்.


அதன் பின்னர் அமுதா செந்திலிடம் அத்தை தன்னிடம் வருத்தத்தில் இருப்பதாக சொல்லி கவலை அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது?
அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.


மேலும் படிக்க | மறைந்த நடிகர் சரத்பாபுவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நடிகர் சூர்யா & கார்த்தி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ