இயக்குநர் கௌதம் மேனன் சொல்வது பொய் என்று சொல்லி, அன்புசெல்வன்படக்குழுவினர்  விடியோ வெளியிட்டுள்ளர்.  ‘அன்புசெல்வன்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் தொடர்பான செய்திகளை பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாக கெளதம் மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது திரையுலகில் பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிவிட்டரில் கெளதம் மேனன் இவ்வாறு பதிவிட்டிருந்தார்: “இது எனக்கு அதிர்ச்சியாகவும் செய்தியாகவும் இருக்கிறது. நான் நடிக்கவிருக்கும் இந்தப் படம் எது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருக்கும் இயக்குனரை எனக்குத் தெரியாது நான் அவரை சந்தித்ததேயிவில்லை. இந்த செய்தியை வெளியிடுவதால், தயாரிப்பாளருக்கு பெரிய பெயர் கிடைக்கலாம் என்று நினைத்திருக்கலாம். ஆனால், இது போன்ற ஒன்றை மிக எளிதாக செய்ய முடியும் என்பது அதிர்ச்சியாகவும் பயமாகவும் இருக்கிறது”.



ஆனால், கெளதம் மேனனின் டிவிட்டர் பதிவுக்கு மறுப்பு தெரிவித்து படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கெளதம் மேனன் நடித்த காட்சிகள் கொண்ட வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது. இது, திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


“தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராகவும், தனது படைப்புகள் மூலம் சமூக பிரச்சனைகளை தொடர்ந்து பேசி வருபவருமான பா.இரஞ்சித் அவர்கள், வளரும் கலைஞர்களை ஊக்குவிப்பதில் என்றுமே தவறியதில்லை. அந்த வகையில், வளரும் மக்கள் தொடர்பாளர்களான சுரேஷ் சுகு மற்றும் தர்மதுரை ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்கள் பணியாற்றும் ‘அன்புசெல்வன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்”.


இயக்குநர் கெளதம் மேனனின் டிவிட்டர் பதிவு குறித்து, இயக்குநர் பா.இரஞ்சித்திடம் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். வளரும் கலைஞர்களுக்கு உதவும் நோக்கத்தில் இயக்குநர் பா.இரஞ்சித் செய்த இந்த செயல் தற்போது அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆனால், பட்க்குழுவினருடனான சில பிரச்சனைகள் காரணமாக, இயக்குநர் கெளதம் மேனன் பொய்யான பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்று அன்புசெல்வன் படக்குழு தெரிவித்துள்ளது. 



பா.இரஞ்சித் அவர்களுக்கும் இதற்கும் எந்த வகையிலும் சம்பந்தம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம், இந்தப் படத்தின் PR பணிகளைக் கையாளும் சுரேஷ் மற்றும் தர்மதுரை ஆகியோரை ஊக்குவிக்கும் வகையில் ஃபர்ஸ்ட் லுக்கை  அவர் வெளியிட்டார். 


எனவே, இனி அன்புசெல்வன் பர்ஸ்ட் லுக் விவகாரம் தொடர்பாக, இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களது பெயரை சேர்க்க வேண்டாம், என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம். அதே சமயம், வளர்ந்து வரும் எங்களுக்கு கைகொடுக்க நினைத்து உதவிய இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு எங்களால் இப்படி ஒரு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டதற்காக, நாங்களும், அன்புசெல்வன் படக்குழுவினரும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.


செவண்டி எம்எம் ஸ்டுடியோவின் தயாரிப்பாளர் எம்.மகேஷ், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலையீட்டின் மூலம் இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண்பார் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம். கவுதம் வாசுதேவ் மேனன் சாரின் எபிசோடுகள் அடங்கிய இந்த படத்தின் முதல் ஷெட்யூல் ஏற்கனவே முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது” என்று அந்த அறிக்கையில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.


Also Read | சூப்பர் ஹிட் படங்களின் ரீமேக் வாய்ப்பை நிராகரித்த சிவகார்த்திகேயன்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR