‘அங்காடித் தெரு’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை சிந்து. இவர், சிந்து வில்லியாக நடித்த திரைப்படம் த.நா.  இந்தத் திரைப்படம் தற்போது அனகபுத்தூர் கணேஷ் திரையரங்கு, காசி தியேட்டர் உள்ளிட்ட பல்வேறு திரையரங்கில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை..


தமிழ் சீரியல்கள் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி பின்னர் வெள்ளித்திரைக்கு சென்ற நடிகைகளுள் ஒருவர், சிந்து. இவர், அங்காடி தெரு படத்தில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மனைவியாக நடித்து பலரையும் கவர்ந்தார். அது மட்டுமன்றி அவ்வப்போது சிறு சிறு காமெடி ரோல்களில் நடிப்பது அல்லது சிறு வேடங்களில் ஒரு சில சீன்களில் நடிப்பது என அவ்வப்போது திரையுலகில் தலைக்காட்டி வந்தார். குறிப்பாக வடிவேலுவுக்கு ஜோடியாக சில படங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து இவர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். அவர், தனது சினிமா வாழ்க்கை குறித்தும் தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் ஒருமுறை நேர்காணலில் பேசினார்.


மேலும் படிக்க | Shruti Haasan: ஸ்ருதி ஹாசனுக்கு இத்தனை கோடி சொத்து இருக்கா?! சொகு கார்-சொந்த வீடு..இன்னும் என்ன?


அப்போது, கடந்த 2020ஆம் ஆண்டு மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டதாகவும் ஆரம்பத்தில் தனது மார்பகத்தில் சிறியதாக எழுந்த கட்டியை கவனிக்காமல் விட்டதாகவும் இதுவே தனது மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, சிந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உயிரிழந்தார். 


புதுப்படம் வெளியானது..


அங்காடி தெரு’ சிந்துவிற்கு நன்றி செலுத்தும் விதமாக நகல் நட்சத்திர கவிஞர்கள் திரையரங்கில் நடிகை சிந்துவின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


நகல் நட்சத்திர கலைஞர்களுக்கும் மற்றும் சாலை ஓரத்தில் வசிக்கும் ஏழை எளியவர்க்கும் அங்காடித்தெரு சிந்து பல்வேறு உதவிகள் செய்ததாகவும் அவரை நினைவு கூர்ந்தனர். மறைந்த பிறகு படம் வெளியாகும்போது அவருக்கு அஞ்சலி செலுத்தியது ரசிகர்களிடம் நெகிச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் படிக்க | Bhavatharini: ‘மயில் போல பொண்ணு ஒன்னு..’ பவதாரணியின் சிறு வயது புகைப்படங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ