பிரபல நடிகையுடன் காதலில் விழுந்த அனிருத்..! விரைவில் திருமணமா..?
Anirudh Ravichander Love Rumour: தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான அனிருத், பிரபல நடிகை ஒருவரை கரம் பிடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோலிவுட்டின் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர், அனிருத் ரவிச்சந்தர். 2012 ஆம் ஆண்டு வெளியான ‘3’ திரைப்படம் மூலம் இவர் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் இசையமைத்துள்ள பல பாடல்கள் மரண ஹிட் அடித்துள்ளன.
‘இந்த’ நடிகையுடன் காதலா..?
அனிருத் குறித்த காதல் கதைகள் அவ்வப்போது இணையத்தில் வட்டமடிப்பது வழக்கமான ஒன்று. அனிருத்தின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில் இவர், ஆண்டிரியாவை காதலித்ததாக கூறப்பட்டது. அதன் பிறகு வயது வித்தியாசம் காரணமாக இவருவரும் பிரிந்து விட்டதாகவும் அவரே ஒரு நேர்காணலில் கூறினார். இதையடுத்து பல நடிகைகளையும் இவரையும் வைத்து காதல் வதந்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
மேலும் படிக்க | ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானை விட அதிகம் சம்பளம் வாங்கும் அனிருத்..!
ஜவான் பட ரிலீஸை அடுத்து அனிருத் குறித்த தகவல்களை வட இந்திய ஊடகங்கள் பல செய்திகளாக வெளியிட்டு வருகின்றன. அப்படி அவர்கள் வெளியிட்டுள்ள தகவல் ஒன்று, அனிருத்தின் காதல்-திருமணம் குறித்த செய்திதான். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ள கீர்த்தி சுரேஷிற்கும் அனிருத்திற்கும் காதல் என பாலிவுட் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்த வருடத்திற்குள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது உண்மையா..?
நடிகை கீர்த்தி சுரேஷ் அனிருத்துடன் சேர்ந்து ரெமோ, தானா சேர்ந்த கூட்டம் உள்பட பல படங்களில் ஒன்றாக பணிபுரிந்துள்ளார். இவர்கள் அந்த படங்களின் ப்ரமோஷன்களின் போதும், சில பட விழாக்களிலும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலானது. அப்போதே இவர்களுக்குள் காதல் என்று வதந்தி பரவியது. இதனை உடனடியாக கீர்த்தி மறுத்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷ், துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதை கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மறுத்தனர். தற்போது வெளியாகியுள்ளவை வதந்திகள் மட்டுமே என்றும் சினிமா வட்டாரத்தை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
‘ராக்ஸ்டார் அனிருத்’ அனிருத்:
சிறு வயதில் இருந்தே இசை மீது நாட்டம் கொண்ட அனிருத்தை தனது 3 படம் மூலம் அறிமுகம் செய்து வைத்தவர் தனுஷ். தனது முதல் படத்திலேயே ‘ஒய் திஸ் கொலவெறி’ எனும் பாடலுக்கு மெட்டு போட்டு உலகளவில் ட்ரெண்டாகினார் அனிருத். ஆல்பம் பாடல்கள், முன்னணி இசையமைப்பாளர்களின் படங்களில் பாடுவது, பாடல்களின் கேமியோ ரோலில் தோன்றுவது என பல்வேறு முகம் காட்டி ரசிகர்களை ஈர்த்தார். இவரது வளர்ச்சியை பார்த்த ரசிகர்கள் ‘ராக்ஸ்டார்’ என்று அவ்வப்போது இவரை அழைப்பதுண்டு. சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு இசையமைத்தார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட். அட்லீ இயக்கத்தில் கடந்த 7ஆம் தேதி வெளியான ‘ஜவான்’ படத்தின் இசையமைப்பாளரும் இவர்தான். தற்போது, பாலிவுட் ரசிகர்கள் பலரால் தேடப்படும் இசையமைப்பாளர் அனிருத்தான்.
அனிருத்தின் அடுத்தடுத்த படங்கள்..
மூத்த இசையமைப்பாளர்களை விட பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசைமைத்து வருபவர், அனிருத். தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திற்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ஜவான் படத்திற்கும் இசையமைத்து தற்போது பான் இந்தியா ஸ்டார் ஆகிவிட்டார் அனிருத். அடுத்து, இவர் இசையமைத்துள்ள ‘லியோ’ படம் வெளியாக உள்ளது. அடுத்த வருடம் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்திற்கும் இவர்தான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே உயரத்தில் இருந்த அனிருத்தின் மார்கெட், இந்த வருடம் உச்சத்திற்கு சென்றுள்ளதாக ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் பற்றிய இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ