Disney plus Hotstar நிறுவனம் சமீபகாலமாக நிறைய படங்களை தனது OTT தளத்தில் வெளியிட்டு வருகிறது.  சமீபத்தில் தனுஷ் நடித்த அட்ராங்கி திரைப்படம் Hotstar-ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  கூடிய விரைவில் மாத சந்தா தொகையையும் குறைக்க உள்ளது.  அடுத்ததாக இயக்குநர் திரு இயக்கத்தில் அஞ்சலி முக்கிய கேரக்டரில் நடித்துள்ள "ஜான்சி" web series ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | வலிமையில் அஜித்தின் கேரக்டர் பற்றி கூறிய H.வினோத்!


Tribal Horse Entertainment சார்பில்  நடிகர் கிருஷ்ணா இந்த  இணைய தொடரை தயாரித்துள்ளார். Zee5 ஒரிஜினல் ‘High Priestess’ மூலம் OTT தளத்தில் தயாரிப்பாளராக அவர் தனது பயணத்தைத் தொடங்கினார், அதைத் தொடர்ந்து அல்லு அரவிந்தின் OTT தளமான AHA உடன் அடுத்த தொடரை  வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, ​​'ஜான்சி' மூலம் ஹாட்ரிக் வெற்றியை கொண்டாடவுள்ளார். இந்த இணைய தொடரில்,  நடிகை அஞ்சலி, முழு நீள அதிரடி வேடத்தில் தோன்றுவது இதுவே முதல் முறை. 


 



இந்த இணைய தொடர் ஒரு முழு நீள ஆக்சன் டிரமாவாக உருவாகியுள்ளது. இத்தொடர் பார்வையாளர்களை ஆரம்பம் முதல் இறுதி வரை இருக்கை நுனியில் வைத்திருக்கும், பரபர திரில் பயணமாக இருக்கும்.  இத்தொடரில் அஞ்சலி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, முமைத் கான், கல்யாண் மாஸ்டர், ராஜ் அர்ஜுன், சரண்யா R, சம்யுக்தா ஹோமத் ஆகியோருடன் மற்றும் பல முன்ணனி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். அரவிந்த் (பண்டிகை மற்றும் டிக்கிலோனா புகழ்) ஒளிப்பதிவு செய்துள்ளார், சண்டைக்காட்சிகளை யானிக் பென் அமைத்துள்ளார், அவர் தி ஃபேமிலி மேன் தொடரின் மூலம் உலகளவில் ரசிகர்களை, தனது  அதிரடி சண்டை காட்சி அமைப்பின் மூலம் மிரள வைத்தவர் என்பது குறிப்பிடதக்கது.


ALSO READ | ஆபாச நடனம்; சன்னி லியோனுக்கு MP அமைச்சர் கெடு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR