ஆபாச நடனம்; சன்னி லியோனுக்கு MP அமைச்சர் கெடு

மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சரான நரோதம் மிஸ்ரா, சன்னி லியோனேவின் பாடலுக்காக நடிகைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 27, 2021, 11:30 AM IST
ஆபாச நடனம்; சன்னி லியோனுக்கு MP அமைச்சர் கெடு title=

மதுபன் மே ராதிகா என்கிற பாடல் வீடியோவை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சரேகமா வெளியிட்டது. அந்த பாடலுக்கு சன்னி லியோன் ஆடியிருந்தார். கிருஷ்ணாவுக்கும், ராதாவுக்கும் இடையேயான காதலை மையமாக கொண்ட பாடலுக்கு சன்னி லியோன் படு கவர்ச்சியாக ஆடி உள்ளார். 

உத்தரப் பிரதேசம் மாநிலம் மதுராவைச் சேர்ந்த இந்து மத சாமியார்கள் சன்னி லியோனிவின் (Sunny Leone) பாட்டு இந்து மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர். மேலும் ராதையின் பெயரால் அரங்கேற்றியிருப்பதாக கூறி இந்த பாட்டை உடனடியாக நீக்க வேண்டும் என கடந்த சனிக்கிழமையன்று அவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

ALSO READ | கருப்பு உடை, காந்தக் கண்களுடன் கவர்ந்திழுக்கும் சன்னி லியோன் -Viral Pics

இந்த நிலையில் தற்போது மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சரான நரோதம் மிஸ்ரா, சமதுபன் மே ராதிகா பாடலுக்காக நடிகை சன்னி லியோனிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் சன்னி லியோன், இந்த பாடலை பாடிய ஷாரிஃப் மற்றும் தோஷி ஆகியோர் இதற்கான பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அடுத்த 3 நாட்களுக்குள் நடிகை சன்னி லியோனே தனது இந்த நடன பாடலை நீக்க வேண்டும் என கெடு விதித்துள்ளார். இதை உடனடியாக செய்யவில்லை என்றால் சன்னி லியோன் மீது போலீசார் எஃஐஆர் பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக நரோத்தம் மிஸ்ரா கூறியதாவது, சிலர் தொடர்ந்து இந்து மத உணர்வை புண்படுத்துகிறார்கள். ராதை எங்களின் கடவுள். அவரை நாங்கள் வணங்குகிறோம். ராதாவுக்கு கோவில்கள் இருக்கிறது. இசையமைப்பாளர் சாகிப் தோஷி அவர் மதம் தொடர்பாக பாடலை உருவாக்க வேண்டியது தானே. 3 நாட்களில் அந்த வீடியோவை அகற்றாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

இதையடுத்து மதுபன் பாடலின் வரிகள் மற்றும் தலைப்பை மாற்றுவதாக சரேகமா அறிவித்துள்ளது. அடுத்த மூன்று நாட்களில் புதுப்பாடல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

ALSO READ | பிகினி உடையில் ஊஞ்சல் ஆடும் பிரபல கவர்ச்சி நடிகை; புகைப்படம் வைரல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News