இணையத்தில் ரீசண்டாக ஹாட் டாப்பிக்காக அனல் பறப்பது பீஸ்ட் படம் பற்றிய செய்திகள் தான்.  ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது .  தினம் தினம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  விஜய் ரசிகர்கள் பலரும் இப்படத்தின் பாடல்கள் குறித்த அப்டேட்டுகளை கேட்டுக்கொண்டே இருந்த நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இப்படத்திலிருந்து இரண்டு பாடல்களை வெளியிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | தளபதி விஜய் குரலுக்கு கிடைத்துள்ள இமாலய பரிசு - கூலா தெரிஞ்சுக்கோ நண்பா


பிப்ரவரி 14ம் தேதி முதல் சிங்கிளான 'அரபிக்குத்து' பாடலையும், மார்ச் 19ம் தேதி இரண்டாம் சிங்கிளான 'ஜாலியோ ஜிம்கானா' பாடலையும் வெளியிட்டது.  இந்த இரண்டு பாடல்களுமே ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக இரண்டு பாடல்களுமே பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.  இப்படத்திலிருந்து பாடல்கள் சில வெளியாகி ரசிகர்களின் தாகத்தை தணித்தாலும் இப்படம் குறித்த ஆவல் இன்னும் அடங்கவில்லை.  இதில் நடிக்கும் வில்லன் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.



துப்பாக்கி படம் போன்று தீவிரவாத அமைப்பை பற்றி கூறும் விதமாக இப்படம் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.  மேலும் இந்த படத்தில் இரண்டு அல்லது மூன்று வில்லன்கள் இருக்கக்கூடும் என்றும் பேசப்பட்டு வருகிறது.  இதில் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிற செய்திகள் ஏற்கனவே அரசல் புரசலாக பேசப்பட்டு வந்தது.  மேலும் இதில் மெயின் வில்லனாக அங்கூர் விகல் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 'மரியான்' படத்திலும், 'ஸ்லம் டாக் மில்லியனர்' படத்திலும் நடித்துள்ளார்.  மற்றொரு வில்லன் யாராக இருக்கும் அல்லது இந்த படத்தில் இரண்டு வில்லன்கள் மட்டும் தானா என்கிற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.  இன்னும் சில தினங்களில் இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



மேலும் படிக்க | 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பம்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR