தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னா ஸ்கூல் ரூமுக்குள் சிக்கி கொள்ள ஷண்முகமும் அவனது குடும்பமும் தேடி பிடித்து ரத்னாவை மீட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்ணா மெகா சீரியலில், ரத்னாவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வருகின்றனர். தங்கைகள் மற்றும் வைகுண்டம் பார்த்து என்ன ஆச்சு என்று பதட்டம் அடைய ஒன்னுல்ல கிளாஸ் ரூம்ல இருந்தது தெரியாம வாட்ச் மேன் உள்ள வச்சு பூட்டிட்டாரா என்று பரணி சொல்கிறாள். 


ரத்னாவை உண்மையா முத்து பாண்டி ஏதாவது பண்ணிட்டானா என்று வைகுண்டம் கேட்க, அப்பா நீ வேற ஏதாவது சொல்லாத, இசக்கி காபி போட்டு கொடு என்று சொல்கிறான் சண்முகம்.



பிறகு வெங்கடேஷ் ரத்னாவிற்கு சொல்லாம ட்ரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு சென்றதை சண்முகம் சொல்ல, ஷாக் ஆகின்றனர். சண்முகம், பரணி வெங்கடேஷ் சொந்த ஊர் தெரியுமா என்று கேட்க, திண்டுக்கல் பக்கம் ஒரு கிராமம் என்று ரத்னா சொல்கிறாள். காலையில் போய் பார்க்கணும் என்று சண்முகம் முடிவெடுக்கிறான்‌.


மேலும் படிக்க | ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக எஸ்.ஜே.சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?


மறுநாள் சண்முகமும் பரணியும் வெங்கடேசனை பார்க்க ஊருக்கு புறப்படுகின்றனர். ரத்னா தான் வரவில்லை என்று சொல்கிறாள். பரணி திட்டி அழைக்க எனக்கு தெரியாம ட்ரான்ஸ்பர் வாங்கிட்டாரு மொபைல் நம்பர் மாத்திட்டாரு, இதுக்கு மேல என்ன கேக்கணும் உங்களுக்கு புரியலையா என்கிறாள். என்ன காரணம் என்று தெரிஞ்சுக்க வேண்டாமா போகலாம் என்று சொல்லி கம்பல் செய்து அழைக்கிறாள்.


என்ன வேண்டான்னு சொல்லாம சொல்லிட்டாரு என்று அழுகிறாள். இதை பார்த்து தங்கைகளும் அழுகின்றனர். என் பொண்ணு வாழ்க்கை இப்படி ஆச்சே என்று வைகுண்டம் கண் கலங்குகிறார். இருப்பினும் ரத்னாவை சமாதானம் செய்து அழைத்துச் செல்கின்றனர்.


மேலும் படிக்க | ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக எஸ்.ஜே.சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?


வாத்தியார் வெங்கடேசன் அம்மா, அப்பாவுடன் பெண் பார்ப்பதற்காக வந்து இறங்குகின்றனர். வாத்தியார் வெங்கடேஷன் மனமில்லாமல் இருக்கிறான். எதுக்கு மூஞ்சிய இழுத்துக்கிட்டு இருக்கே நல்லா சிரிச்ச முகத்தோடு வாடா என்று சொல்லி அழைத்து செல்கின்றனர். அப்பாவிற்காக வெங்கடேஷன் சம்மதிச்சு செல்கிறான். பெண் வீட்டார் வரவேற்று அழைத்து செல்கின்றனர். 


ஷண்முகம் உள்ளிட்டோர் தேடி கண்டுபிடித்து வெங்கடேஷன் வீட்டுககு வருகின்றனர். வீட்டு கதவை தட்ட ஒரு வயதான பாட்டி, கதவை திறக்கிறாள். யாரு என்ன என்று விசாரித்து வெங்கடேஷ் வேலை பார்த்த ஊர்ல இருந்து வரீங்களா பொண்ணு பாக்க போறதா சொன்னானா பொண்ணு இந்த மாதிரி நல்லா அழகா இருப்பா சீக்கிரம் போங்க என்று சொல்ல, மூவரும் ஷாக் ஆகின்றனர். 


பெண் வீட்டிற்கு போக வேண்டும் என்று சொல்ல ரத்னா வேண்டாம் ஊருக்கு போகலாம் என்று சொல்கிறாள். சமாதானம் செய்கின்றனர். போயி என்ன செய்ய போறீங்க என்று கோபப்படுகிறாள். கெஞ்சி அழைத்துக் கொண்டு செல்கின்றனர். 


இங்கே பெண் காபி கொடுக்கிறாள். வெங்கடேஷன் நிமிர்ந்து பார்க்கவில்லை, மாப்பிள்ளைக்கு வெக்கம் என்று கிண்டல் செய்கின்றனர். பிடித்திருக்கா என்று வெங்கடேஷனை கேட்க, அம்மா அப்பாவுக்கு பிடிச்சிருந்தா போதும் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | கார்த்திகை தீபம்: மருதாணியால் மாட்டிக் கொள்ளும் தீபா? கார்த்திக் செய்யப் போவது என்ன? பார்த்து மகிழுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ