தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அண்ணா’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்ணா: இன்றைய எபிசோட்


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த ஷண்முகம்  இசக்கிபோட்டோவை எடுத்து வைத்து கொண்டு கண் கலங்க அதை பார்த்து எல்லாரும் பதறிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


கண் கலங்கும் சண்முகம்


அதாவது ஷண்முகம் அழுவதை பார்த்த தங்கைகள் உனக்காக தான் இந்த போட்டோவை மறைத்து வைத்திருந்தேன் என்று சொல்ல ஏன்லே அப்படி பண்ணீங்க, இசக்கி இந்த குடும்பத்தோட மகாராணி, நமக்காக தான் அவ அங்க போய் கஸ்டப்படுறா என்று கண் கலங்குகிறான்.


மேலும் இனிமே என் தங்கச்சிக்கு எதாவது பிரச்னைனா அந்த வீட்ல இருக்குற ஒருத்தரையும் உசுரோட விட மாட்டேன் என்று சொல்கிறான். மறுபக்கம் பாண்டியம்மா எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று அடம் பிடித்து கொண்டிருக்க சௌந்தரபாண்டி சாப்பிட சொல்லி கொண்டிருக்கிறார். 


அந்த ஷண்முகம் என்ன வந்து மிரட்டிட்டு போறான், உன் பொண்ணு என்னை அறையுற, உன்ன பார்த்தாலே பயந்திட்டு கிடந்த உன் பொண்டாட்டியும் அந்த இசக்கியும் உன்ன மதிக்க கூட மாற்றாளுங்க இதையெல்லாம் பார்த்துட்டு நீ என்ன பண்ண என்று கோபப்பட சௌந்தரபாண்டி கண்டிப்பா எதாவது பண்றேன் அக்கா என்று சொல்லி சாப்பிட சொல்ல பாண்டியம்மா விடாமல் பேசி கொண்டிருக்கிறாள். 


சௌந்தரபாண்டியை தூண்டிவிடும் பாண்டியம்மா


உடனே சிவபாலன் அதான் சாப்பாடு வேண்டாம்னு சொல்றாங்களே விட வேண்டியது தானே என்று சொல்ல சௌந்தரபாண்டி இருக்கும் கோபத்தில் சிவபாலனை போட்டு அடித்து துவைத்து எடுக்கிறார். பாண்டியம்மா இவனை அடிக்கிறது பெருசு இல்ல இதே மாதிரி அந்த சண்முகத்தை அடிக்கணும் என்று சொல்கிறாள். 


மேலும் படிக்க | தளபதி விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவர் தான்! மாஸ் அப்டேட்!


பிறகு சிவபாலன் அழுது கொண்டிருக்க பாக்கியம் என்னால் நீயும் கஸ்டப்படுற என்று இசக்கியிடம் சொல்ல அவள் அண்ணனே வந்து என்னை கூப்பிட்டு இருந்தாலும் நான் உன்னை விட்டு போய் இருக்க மாட்டேன். என் அத்தை இங்க கஷ்டப்படும் போது நான் எப்படி போவேன் என்று பாக்கியத்துக்கு ஆறுதலாக பேசுகிறாள். மறுபக்கம் அசந்து தூங்கி கொண்டிருந்த ஷண்முகம் திடீரென அலறி அழ பரணி என்னாச்சி என்று கேட்கிறாள். 



அந்த பாண்டியம்மா வந்த பிறகு தான் இவ்வளவு பிரச்சனை, அவ அந்த வீட்ல இருக்க கூடாது என்று சொல்ல பரணி அவ்வளவு தானே அதுக்கு நான் ஒரு வழி பண்ணுறேன் என்று சொல்கிறாள். 


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


அண்ணா: சீரியலை எங்கு பார்ப்பது?


அண்ணா சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | படே மியான் சோட் மியான் படத்தில் இணைந்த ஜவான் ஸ்டண்ட் இயக்குனர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ