தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அண்ணா' சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்ணா: இன்றைய எபிசோட் அப்டேய்


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி, பாக்கியம், சண்முகத்தின் தங்கைகள் என எல்லாரும் சேர்ந்து ஓட்டு சேகரிக்க தொடங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அதாவது, ஷண்முகம் சின்ன பிள்ளைகளுக்கு ஒரு கிரிக்கெட் போட்டி வைத்த தென்னை மட்டையில் கிரிக்கெட் விளையாடிட்டு இருந்த அவர்களுக்கு புது பேட் வாங்கி கொடுத்து இனிமே இதுல விளையாடுங்க என்று சொல்கிறான், பிறகு உங்க அப்பா அம்மாவை யாருக்கு ஓட்டு போட சொல்வீங்க என்று கேட்க பிள்ளைகள் உங்களுக்கு தான் என்று சொல்ல அவர்களது பெற்றோரும் சண்முகத்துக்கு தான் ஓட்டு போடுவோம் என்று சொல்கின்றனர். 


பாக்கியத்தை திட்டும் சௌந்தரபாண்டி


இதனை தொடர்ந்து நேராக சௌந்தரபாண்டி வீட்டிற்கு வர அவர் விஷயம் அறிந்து பாக்கியத்தை பிடித்து திட்டுகிறார். பரணி ஆமாம் எனக்கு ஒட்டு கேட்க தான் போய் இருந்தோம், உங்க கிட்டயும் ஓட்டு கேட்க தான் வந்தோம் என்று சொல்லி வெறுப்பேற்றுகிறாள். பிறகு சௌந்தரபாண்டி பரணியை ஜெயிக்க விட கூடாது ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசிக்கிறார். 


மறுபக்கம் வீட்டிற்கு வந்த பரணி எல்லாரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது மொத்தம் 22 ஓட்டுல 20 ஓட்டு எனக்கு தான். மீது 2 ஓட்டு தான் இருக்கு. அது ஷண்முகம் கிட்டயும் சௌந்தரபாண்டி கிட்டயும் இருக்கு என்று சொல்கிறாள். ஷண்முகம் என்கிட்ட ஓட்டு கேட்டா தான் போடுவேன் என்று சொல்ல பரணி அப்படினா உன் ஓட்டே எனக்கு தேவையில்லை என்று சொல்கிறாள். 



ஸ்டேஷனலில் நடப்பதை வீடியோவாக காட்டும் முத்துப்பாண்டி 


அடுத்து சௌந்தரபாண்டி முத்துபாண்டியிடம் அந்த பரணி ஜெயிக்க கூடாது, அவ ஜெயித்தா எல்லா விஷயத்தையும் நோண்ட ஆரம்பித்துடுவா, அப்புறம் ஸ்டேஷனில் இருக்கும் நகை மொத்தமாக அப்படியே போய்டும் என்று சொல்ல முத்துப்பாண்டி அங்க சிசிடிவி கேமரா வச்சிருக்கேன் என்று ஸ்டேஷனலில் நடப்பதை வீடியோவாக காட்டுகிறான்.


மேலும் படிக்க | அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் 'பயமறியா பிரம்மை' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


அண்ணா: சீரியலை எங்கு பார்ப்பது?


அண்ணா சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | Sakshi Agarwal : கேட் வுமனாக மாறிய சாக்‌ஷி அகர்வால்! வைரல் புகைப்படங்கள்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ