Sakshi Agarwal : கேட் வுமனாக மாறிய சாக்‌ஷி அகர்வால்! வைரல் புகைப்படங்கள்..

Sakshi Agarwal : தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் சாக்‌ஷி அகர்வால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக சில புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார்.

Sakshi Agarwal : கோலிவுட் உலகில் துணை நடிகையாக இருந்து, தற்போது கதாநாயகியாக வளர்ந்து வருபவர், சாக்‌ஷி அகர்வால். அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை பதிவிட்டு வரும் இவர் சமீபத்தில் கருப்பு உடை அணிந்து சில போட்டோக்களை வெளியிட்டிருக்கிறார். அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போமா?

1 /8

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர், சாக்‌ஷி அகர்வால். மாடலாக இருந்து பின்பு நடிகையாக மாறியவர். 

2 /8

காலா படத்தில் ரஜினிகாந்திற்கு மருமகளாக நடித்திருந்த இவருக்கு, பெரிய வெளிச்சத்தை கொடுத்தது பிக்பாஸ் சீசன் 3. 

3 /8

பிக்பாஸில் இருந்து கிட்டத்தட்ட 49 நாட்களுக்குள்ளாகவே இவர் வெளியேற்றப்பட்டார். ஆனாலும், இவருக்கு அதற்குள்ளாகவே ரசிகர்கள் சேர்ந்து விட்டனர். 

4 /8

தமிழ், கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ள சாக்‌ஷி அகர்வால் முதலில் ஒரு நிறுவனத்தில் மார்கெட்டிங் துறையில் இருந்தார். 

5 /8

ஹாபியாக மாடலிங் துறைக்குள் நுழைந்த இவருக்கு, விளம்பர பட வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தன. 

6 /8

ராஜா ராணி படத்தில் சில விநாடிகள் காட்சிக்கு வந்திருந்த இவர் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நன்கு முகம் பரிட்சியமாகும் கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். 

7 /8

இவர் நடிபில் தற்போது கெஸ்ட் சேப்டர் 2 மற்றும் தி நைட் ஆகிய படங்கள் வெளிவர இருக்கின்றன. 

8 /8

சாக்‌ஷி, சமீபத்தில் கருப்பு உடையணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் பார்ப்பதற்கு கேட் வுமன் போல இருப்பதாக ரசிகர்கள் கமெண்டுகளில் தெரிவித்து வருகின்றனர். இவை, தற்போது வைரலாகி வருகிறது.