பாசமிகு அண்ணா கொடுக்கும் ஷாக்! ரத்னாவை தூக்க வந்த ரவுடிகளுக்கு அதிர்ச்சி
Anna Serial Update: ரத்னாவை தூக்க உள்ளே புகுந்த ரவுடிகள்.. ஷாக் கொடுத்த ஷண்முகம் - அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் ஷண்முகம் கார்த்தியை பிடித்து நர்ஸ் கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என்று சொல்லி கொண்டிருக்கும் வேளையில் அங்கு வந்த போலீஸ் வீட்டில் காவலுக்கு இருப்பது போலீஸ் இல்லை என்று சொல்லி ஷாக் கொடுக்கின்றனர்.
தமிழ் தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பானாலும் ஒரு சிலவற்றை மட்டுமே ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். அப்படி ரசிகர்கள் பலர் விரும்பி பார்க்கும் சீரியல்களுள் ஒன்று, அண்ணா. இந்த தொடரில் பிரபல சின்னத்திரை நடிகர் செந்தில்குமார் ஷன்முகம் எனும் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
4 தங்கைகளையும் கரை சேர்க்க விரும்பும் பாசமிகு அண்ணனாக செந்தில் இதில் நடித்துள்ளார். இந்த தொடர் முதல் எபிசோடில் இருந்து தற்போது வரை பல விருவிருப்பான திருப்பங்களை சந்தித்து வருகிறது. இன்றைய எபிசோடிலும் இதில் பல சம்பவங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாமா..?
மேலும் படிக்க | லண்டனில் கெத்து காட்ட தயாராகும் லியோ... வெளியான புதிய அறிவிப்பு..குஷியில் ரசிகர்கள்
நேற்றைய எபிசாேட்..
‘அண்ணா’ சீரியலின் நேற்றைய எபிசோடில் இந்த நிலையில் இன்றைய எபிசோடில் இவனை பிடிச்சிட்டு போங்க, பரணி நான் வர வரைக்கும் எந்த விஷயமும் தெரிய கூடாது என்று வெட்டுக்கிளையை கூப்பிட்டு கொண்டு வேக வேகமாக கிளம்ப இதை பார்த்த சௌந்தரபாண்டியும் முத்து பாண்டியும் அதிர்ச்சி அடைகின்றனர். உடனே ரவுடிகளுக்கு போன் போட்டு ரத்னாவை உடனடியாக தூக்க சொல்லி உத்தரவு போடுகின்றனர்.
அடுத்ததாக ரவுடிகள் வீட்டின் கதவை தட்ட ரத்னா தூக்கத்தில் இருந்து எழுந்து பயந்து நடுங்க மறுபக்கம் பரணி கையில் மெஹந்தி வைத்து கொண்டதை ஷண்முகத்திடம் காட்டுவதற்காக அவனை தேட சௌந்தரபாண்டி அவன் கிட்ட எதுக்கு காட்டணும், கட்டிக்க போறவன் கிட்ட காட்டுனா கூட பரவாயில்லை என்று சொல்ல பரணி கார்த்திக் ரூமுக்கு வர அங்கு அவனை காணமால் குழப்பம் அடைகிறாள்.
இங்கே கதவை திறக்க முடியவில்லை என ரவுடிகள் முத்துபாண்டியிடம் சொல்ல கடப்பாரையை வைத்து உடைக்க சொல்கிறான். ரவுடிகளும் அப்படியே செய்ய ரத்னா பயத்தில் சண்முகத்துக்கு போன் செய்ய சௌந்தரபாண்டி எடுத்து பேச அதிர்ச்சி அடைகிறாள். அடுத்து வெட்டுக்கிளி போனில் இருந்து ரத்னாவுக்கு போன் செய்து முத்துபாண்டியின் திட்டத்தை சொல்ல வைகுண்டம் என்னை தாண்டி தான் என பொண்ணை தொட முடியும் என வேலுடன் நிற்க ரவுடிகள் கதவை உடைத்து உள்ளே நுழைய வேலுடன் வைகுண்டம் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
மேலும் படிக்க | 2 நாளில் 200 கோடியை தாண்டிய ஜவான்..! அசல் வசூல் நிலவரம் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ