காட்சிகள் அமைப்பில் கோட்டைவிட்ட சிவா; அண்ணாத்த விமர்சனம்
ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் இன்று அண்ணாத்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி உள்ளது.
சிறுத்தை சிவாவின் விஸ்வாசம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு, ரஜினி தர்பார் படத்தின் தோல்விக்கு பிறகு இருவரும் இணைந்து அண்ணாத்த என்ற படத்தின் இணைந்தனர். சன் பிக்சர்ஸ் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்க இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது. கிராமத்துக் கதைகளில் கலக்கி வரும் சிவா, நீண்ட நாட்களாகக் கிராமத்துக் கதைகளில் நடிக்காத ரஜினியை வைத்து எவ்வாறு எடுக்க போகிறார் என்ற நிலையில் ரசிகர்கள் இந்த படத்தைப் பார்க்க ஆவலுடன் இருந்தனர்.
தீபாவளி வெளியீடு என்ற அறிவிப்பு வந்தவுடன் அன்று வெளிவர இருந்த மற்ற திரைப்படங்கள் பின்வாங்கின. இந்நிலையில் இன்று அண்ணாத்த (Annaatthe) திரையரங்கில் வெளியாகி உள்ளது. 25 வருடங்களுக்குப் பிறகு தீபாவளி தினத்தில் ரஜினி படம் வெளியாகி உள்ளதால் காலை முதலே ரசிகர்கள் திரையரங்கிற்குப் படை எடுக்க கிளம்பினர். படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை ரஜினியே மொத்த படத்தையும் தாங்குகிறார். இவருக்கு வயசே ஆகாத என்று கேட்கும் வகையில் இளமையாக அதே ஸ்டைலுடன் உள்ளார். காட்சிக்கு காட்சி ரஜினிக்கு பில்டப் கொடுப்பதில் கவனம் செலுத்திய சிவா காட்சி அமைப்பில் கோட்டைவிட்டுள்ளார்.
ALSO READ | முறுக்க, கொதிக்க, தெறிக்க வெளியானது அண்ணாத்த மோஷன் போஸ்டர்
ரஜினி (Rajinikanth) நின்னா டயலாக், திரும்பினா டயலாக், உட்கார்ந்தால் டயலாக், நடந்தால் டயலாக் என்று படம் முழுவதும் நீதி, நியாயம், தர்மம் என எல்லா கா ரசிகர்கள் போதும்டா சாமி என்று சொல்லும் அளவிற்கு வைத்துள்ளார் சிவா. அவன் பணம், அதிகாரம் இருக்கலாம்.. என்ட ஒன்று தான் இருக்கிறது, அது பாசம் என்பது போல காலம் காலமாக ஹீரோக்கள் பேசும் வசனங்களாகவே உள்ளது. மீனா, குஷ்பு இவர்களின் ஆரம்ப காட்சி நன்றாக இருந்தாலும், போக போக மூஞ்சி சுளிக்க வைக்கிறது. என்னுடைய புருஷனை கொண்ணுடுறேன், விவாகரத்து பண்ணுகிறேன் உங்களைக் கல்யாணம் பண்ணிகிரேன் போன்ற அபத்தமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
நம்ம ரெண்டு பேரும் ஒரே சாமிதான் கும்புடுறோம்(ஒரே ஜாதி தான் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்), அதனால் உங்க தங்கச்சிய கட்டி குடுங்க போன்ற காட்சிகளும் உள்ளன. ரஜினி கூடவே படம் முழுவதும் வரும் சூரி முதல் பாதியில் சிரிக்க வைக்கிறார். மற்றபடி தமிழ் சினிமாவில் உள்ள பாதி பேர் படத்தில் இருந்தாலும் வீணடிக்கபட்டுள்ளனர். அடுத்த காட்சில உன்ன அழுக வைக்கிறேன் பார் என்று சொல்லி வைத்து எடுத்தது போல் உள்ளது சென்டிமென்ட் சீன்ஸ். விஸ்வாசம் படத்தில் சென்டிமென்ட்டை அழகாக கையாண்ட சிவா அண்ணாத்தையில் அதனை தவர் விட்டுள்ளார். பெரிய ஹீரோக்கள் படத்தில் சம்பரதாயதிற்க்கு வரும் கதாநாயகியாகவே இந்த படத்திலும் வருகிறார் நயன்தாரா.
தங்கச்சி பாசத்தைப் பெரிய அளவில் சொல்கிறேன் என்று எடுக்கப்பட்ட காட்சிகள் எதுவுமே சுத்தமாக எடுபடவில்லை. ஜெய் பீம்மில் கலக்கிய பிரகாஷ்ராஜ் இப்படத்தில் முழுவதுமாக வீணடிக்கப்பட்டுள்ளார். முதல் பாதி முழுவதும் ரஜினியின் காமெடி காட்சிகள் அனைவரையும் சிரிக்க வைக்கிறது. ரஜினியின் தங்கச்சியாக வரும் கீர்த்தி சுரேஷ் நாலேயே படம் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. ஆனாலும், ரஜினியை விட்டு கீர்த்தி விலகி செல்லும் காரணம் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை. நாடக தனமான காட்சிகள் படத்தின் விறுவிறுப்பைச் சுத்தமாக கெடுத்துவிட்டது.
தங்கச்சி/பொண்ணு பக்கத்துலயே இருக்கணும்.. வில்லன்களை அடிகணும்.. ஆன அவங்களுக்கு ஹீரோ சண்டை போடுவது தெரிய கூடாது..என்று வீரம், வேதாளம், விஸ்வாசம் படங்களில் இடம் பெற்ற அதே டெம்ப்ளேட் காட்சிகள் அண்ணாத்தவிலும் தொடர்கிறது. இமானின் பின்னணி காட்சிகள் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பாடல்களுக்குச் சேர்க்கவில்லை. மொத்தத்தில் பல படங்களின் ஒரு கலவையாக, எந்த படம் என்று சொல்ல முடியாத வகையில் உள்ளது அண்ணாத்த.
ALSO READ | அண்ணாத்த படத்தின் மாஸ் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G