Anniyan Remake: அந்நியன் திரைப்பட இந்தி ரீமேக்கிற்கு தடா; இயக்குநர் ஷங்கருக்கு தயாரிப்பாளர் நோட்டீஸ்
நடிகர் விக்ரம் நடித்து சக்கைப்போடு போட்ட அந்நியன் திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணியை இயக்குனர் ஷங்கர் நிறுத்த வேண்டும் என திரைப்படத் தயாரிப்பாளர் வி.ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சென்னை: நடிகர் விக்ரம் நடித்து சக்கைப்போடு போட்ட அந்நியன் திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணியை இயக்குனர் ஷங்கர் நிறுத்த வேண்டும் என திரைப்படத் தயாரிப்பாளர் வி.ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த நோட்டீஸ் கோலிவுட் மட்டுமல்ல, பாலிவுட் வட்டாரங்களிலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் அந்நியன் திரைப்படத்தை இந்தி மொழியில் எடுக்கப்போலும் தகவலை இயக்குநர் சங்கர் அறிவித்த சில மணி நேரங்களிலேயே இந்த நோட்டீஸ் வந்துள்ளது.
அன்னியனின் தயாரிப்பாளர் வி ரவிச்சந்திரன், இயக்குநர் ஷங்கருக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், அந்நியன் திரைப்படத்தின் கதை தனக்கு சொந்தமானது என்றும் அதற்கான பதிப்புரிமை தன்னிடம் மட்டுமே இருப்பதாக சற்று கடுமையான வார்த்தைகளில் தெரிவித்திருக்கிறார்.
அந்நியன் திரைப்படத்தின் இந்தி மொழியாக்கம் தொடர்பான பணிகளை உடனடியாக நிறுத்துமாறு அவர் இயக்குநர் ஷங்கரை வலியுறுத்தினார். அதோடு, இது தொடர்பாக ஷங்கருக்கு முறைப்படி சட்ட அறிவிப்பையும் அனுப்புவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
Also Read | இந்தியில் ரீமேக்காகும் அந்நியன்- ஷங்கர் இயக்கத்தில் இவர்தான் ஹீரோ!
“அன்னியன் திரைப்படத்தின் தயாரிப்பாளரான நான், எழுத்தாளர் சுஜாதா (அல்லது மறைந்த ரங்கராஜன்) என்பவரிடமிருந்து கதைக்கான முழு உரிமையும் நான் வாங்கினேன், அதற்காக நான் அவருக்கு உரிய கட்டணத்தை செலுத்தியிருக்கிறேன். அதுபோல எனது அனுமதியின்றி, அந்நியன் திரைப்படத்தின் கதைக்கருவை தழுவி திரைபடாம் எடுப்பது அல்லது ரீமேக் செய்வது முற்றிலும் சட்டவிரோதமானது”என்று தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் ஷங்கருடனான தனது கடந்த கால உறவைப் பற்றி குறிப்பிட்டிருக்கும் அன்னியன் திரைப்படத் தயாரிப்பாளர், ஷங்கரின் ‘பாய்ஸ்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடவில்லை என்றாலும், ஷங்கருக்கு அன்னியன் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை தான் வழங்கியதாக சுட்டிக் காட்டினார்.
ஷங்கர் தனது ஒத்துழைப்பால் தான் இழந்த தனது பெயரை மீட்டெடுத்தார் என்றும், அவர் அதை மறந்துவிட்டதாகவும், தனது வெற்றிகரமான அன்னியன் திரைப்படத்தை இந்தியில் எடுக்க முயல்வதாகவும் ரவிசந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
ரன்வீர் சிங் நடிப்பில் அந்நியன் திரைப்படம் இந்தியில் பிரமாண்டமான உருவாகவிருப்பதாக தமிழ் புத்தாண்டு தினத்தன்று, சங்கர் சமூக ஊடகங்களில் அறிவித்தார்.
விக்ரம், சதா, பிரகாஷ் ராஜ் மற்றும் விவேக் ஆகியோர் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் அன்னியன்.
ALSO READ | அஜித், ஷங்கர் இணைய அதிரடியாய் வரவுள்ளதா ‘முதல்வன்-2’? Latest Update!
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR