அஜித், ஷங்கர் இணைய அதிரடியாய் வரவுள்ளதா ‘முதல்வன்-2’? Latest Update!

ஷங்கர் இயக்கத்தில் 'முதல்வன் 2' படத்தில் அஜித் இணையவுள்ளதாக உலவி வரும் தகவல், இருதரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை கூட்டியிருக்கிறது.

Written by - ZEE Bureau | Last Updated : Dec 10, 2020, 05:31 PM IST
  • ஷங்கர் இயக்கத்தில் விரைவில் அஜித் நடிக்கிறார் என தகவல்.
  • முதல்வன் 2 பற்றிய சமீபத்திய புதுப்பிப்பு.
  • ஷங்கர் அஜித் இணைய காத்திருக்கும் ரசிகர்கள்.
அஜித், ஷங்கர் இணைய அதிரடியாய் வரவுள்ளதா ‘முதல்வன்-2’? Latest Update!

நடிப்பில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றிருப்பவர் நடிகர் அஜித் குமார். ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் அஜித்தின் ஒவ்வொரு படத்திற்காகவும் அவரது ரசிகர் பட்டாளம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருகிறது.

1999 ஆம் ஆண்டு ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் எடுத்த மெகா ஹிட் படமான முதல்வன் படத்தின் தொடர்ச்சியில் அஜித் நடிப்பார் என்ற ஊகங்கள் பல நாட்களாக உள்ளன.

கமல்ஹாசனுடன் (Kamal Haasan) ஷங்கர் தனது ‘இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன்பே, இந்த பேச்சுகள் வலம் வரத் தொடங்கின. ஆனால், இப்போது வதந்தி வலுப்பெற்று வருகிறது. ஷங்கர் சமீபத்தில் அஜித்தை சந்தித்ததாகவும், அஜித்துக்கு முதல்வன் 2 இன் ஸ்கிரிப்ட் மிகவும் பிடித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அஜித் (Ajith Kumar) தற்போது ஹெச்.வினோத் தயாரிப்பில் ‘வலிமை’ படத்தில் பிசியாக உள்ளார். அதன் படப்பிடிப்பு முடியும் வரை காத்திருக்கும்படி அஜித் ஷங்கரிடம் கேட்டுகொண்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

சமீப காலங்களில் அஜித், குடும்ப மதிப்புகளைப் பற்றி எடுத்துரைக்கும்  ஸ்கிரிப்ட்களைத் தேர்ந்தெடுத்து வருகிறார். மேலும் அவர் தனது வயதுடன் ஒத்து போகும் கதாபாத்திரங்களிலேயே நடித்து வருகிறார்.

தல அஜித் (Thala Ajith) ரசிகர்கள் உண்மையில் தங்கள் ஹீரோ மெகா இயக்குனர் ஷங்கருடன் இணையும் செய்தியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கமல், ரஜினி, விஜய், விக்ரம், அர்ஜுன் போன்ற அனைத்து பெரிய ஹீரோக்களையும் சங்கர் இயக்கியிருந்தாலும், அவர் இன்னும் தல அஜித்துடன் இணைந்து பணியாற்றவில்லை.

ஷங்கரின் (Director Shankar) ஜீன்ஸ் படத்தில் அஜித் தான் நாயகனாக நடிக்கவிருந்தார் என்றும் ஒரு கருத்து உள்ளது. ஆனால், சில தேதி பிரச்சினைகள் காரணமாகவும் தன்னிடம் போதுமான நேரம் இல்லாததாலும் அஜித் திரைப்படத்திலிருந்து விலக வேண்டியிருந்தது என்று கூறப்படுகிறது. அதன் பின்னர் பிரசாந்த் அப்படத்தில் ஹீரோவாக நடித்தார். பிரஷாந்த் இந்த படத்திற்காக ஏழு படங்களை தியாகம் செய்தார் என்றும் கூறப்படுகிறது.

ALSO READ: நடிகர் அமீர்கானின் மகனுக்கு ஜோடியாகும் தென்னிந்திய கதாநாயகி யார்?

இப்போது, ஷங்கர் இயக்கத்தில் 'முதல்வன் 2' படத்தில் அஜித் இணையவுள்ளதாக உலவி வரும் தகவல், இருதரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை கூட்டியிருக்கிறது.

ஒரு இயக்குனராக ஷங்கர் சமகால இயக்குனர்களில் மிகவும் உயரிய இடத்தை வகிக்கிறார். தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு கொண்டு சென்ற பெருமை அவருக்கு உண்டு. அதேபோல் நடிகர்களில், தன் நடிப்பாலும், தான் சொந்த வாழ்கையில் செய்யும் பல செயல்களாலும் அஜித் ரசிகர்களின் மனதில் ஒரு பெரிய இடத்தை பெற்றிருக்கிறார். இவர்கள் இணையும் படம் கண்டிப்பாக ஒரு சூப்பர் ஹிட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை!!

ALSO READ: செவ்வாய்க்கிழமை இரவு சித்ராவுக்கு நடந்தது என்ன? வெளியான பகீர் தகவல்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News