ஏஆர்.ரகுமானுக்கு இனி மியூசிக் இன்ஸ்ட்ருமென்டே தேவையில்லை... ஏன்?
India`s got talent - ஷோவில் இரண்டு போட்டியாளர்கள் வாய் மற்றும் புல்லாங்குழலில் ஏ.ஆர்.ரகுமான் பாடலுக்கு வாசித்த இசை ஷில்பா ஷெட்டி உள்ளிட்டோரை வியக்க வைத்தது.
சோனி தொலைக்காட்சியில் india's got talent ரியாலிட்டி ஷோவின் 9வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், டான்ஸ், பாடல், அக்ரோபேடிக்ஸ் மற்றும் மாயாஜால வித்தைக்காரர்கள் என தனித்திறமைகளை வெளிப்படுத்தும் பன்முகத்திறமையாளர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். இதுவரை 5 அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் போட்டியாளர்கள் தங்களின் வித்தியாசமான திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ALSO READ | மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன்: போஸ்டர் ரிலீஸ்
அதில், திவ்யான்ஷ் மற்றும் மனுராஜ் ஆகியோர் மியூசிக் பிரிவில் இடம்பெற்றுள்ளனர். மனுராஜ் புல்லாங்குழல் வாசிப்பதிலும், திவ்யான்ஷ் வாயிலேயே பல இசைக்களை வாசிக்கக்கூடிய பீட்பாக்ஸராகவும் உள்ளனர். கடந்த சுற்றில் 1995 ஆம் ஆண்டு ராம்கோபால் வர்மா இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் வெளியான ரங்கீலா படத்தின் ’ரங்கீலா’ பாடலுக்கு தங்களின் வித்தியாசமான இசை வாசிக்கும் திறமையை வெளிப்படுத்தினர்.
ALSO READ | #MeToo-ஆல் ஒரு புதிய இணைய நீதி அமைப்பு உருவாகியுள்ளது: A.R.ரஹ்மான்
அந்தப் பாடலுக்கு மனுராஜ் புல்லாங்குழல் இசையைக் கொடுக்க, பீட்பாக்ஸ்ர் திவ்யான்ஷ் வாயிலேயே மேஜிக் செய்து அசத்தினார். அவரின் ஒவ்வொரு முறையும் சவுண்டை வாயில் மாற்றும்போது அரங்கமே அதிர்ந்தது. நடுவராக இருந்த ஷில்பா ஷெட்டி மற்றும் கிரண் ஆகியோர் எழுந்து நின்று அவர்களின் முயற்சியை பாராட்டினர். அதுவும், நடுவர் பாட்ஷா புல்லரித்துப்போனார். அந்தளவுக்கு சவுண்ட் மிக்சிங்கில் பின்னிபெடலெடுத்துவிட்டனர். இணையத்தில் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள நெட்டிசன்கள், "ஏ.ஆர்.ரகுமான் சார் இந்த பையனை பயன்படுத்திக்கோங்க.. உங்களுக்கு மியூசிக் இன்ஸ்ட்ருமென்ட் வாங்கும் காசு மிச்சமாகும்" என தெரிவித்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR