தமிழ் திரை உலகின் மிகவும் பிரபலமான பாடகியான பி.சுசீலா தமிழ் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் பாடகிகளில் ஒருவர். தனது இனிய குரலால் இன்றும் அவர் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார். அவர் தற்போது தன் குடும்பத்துடன் ஹைதராபாதில் வசித்து வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் பாடியுள்ள ஆயிரக்கணக்கான பாடல்கள் காலத்தைக் கடந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளன. இந்த கால இசை அமைப்பாளர்களுக்கும் அவர் பாடியுள்ளார். அவர்களில் முக்கியமானவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். ரேவதி மற்றும் கஸ்தூரி நடிப்பில் வெளிவந்த புதிய முகம் படத்தின் 'கண்ணுக்கு மை அழகு'  பாடலில் அவர் ரஹ்மானுடன் இணைந்து பணிபுரிந்தார். 


சமீபத்தில் நடந்த ஒரு சமூக ஊடக உரையாடலில், பி. சுசீலாவுடனான தனது சமீபத்திய சந்திப்பு பற்றி பகிர்ந்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு, 'நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?’ என்று அவர் தனக்கு செய்தி அனுப்பியதாக ரஹ்மான் கூறினார். அதன் பிறகு ரஹ்மான் அவரை அழைத்துள்ளார். அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, ரஹ்மான் '99 சாங்க்ஸ்' (99 Songs) படத்தை சுசீலா பார்த்தாரா என அவரைக் கேட்டுள்ளார். அதை தான் எழுதி தயாரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ரஹ்மான் (AR Rahman) மேலும் கூறுகையில், "இந்த படம் நெட்ஃபிக்ஸ் இல் வெளிவந்துள்ளது" என்று கூற, சுசீலா, "நெட்ஃபிக்ஸ் என்றால் என்ன?" என்று கேட்டுள்ளார். பின்னர் அவருடைய சகோதரர் அங்கே வந்து, அவர்களிடம் நெட்ஃபிக்ஸ் இருப்பதாக சுசீலாவிடம் கூறியுள்ளார். பின்னர் சுசீலாவிற்கு 99 சாங்ஸ் படத்தை போட்டுக்காட்டுமாறு அவரது சகோதரரிடம் ரஹ்மான் கேட்டுக்கொண்டுள்ளார். 


படத்தை பார்த்துவிட்டு, ரஹ்மானை சுசீலா தொலைபேசியில் அழைத்துள்ளார். படம் மிக நன்றாக இருந்தது என்று கூறிய சுசீலா, "என் கதையும் இப்படி வெளிவர வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் எனக்கு உதவுவீர்களா?" என்று கேட்டுள்ளார். 


ALSO READ: பரபரப்பு அறிக்கை, ரசிகர்களிடம் கார்த்தி அன்புப் பரிசு வேண்டுகோள்


ரஹ்மானால் தான் கேட்டதை நம்ப முடியவில்லை. அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. "அவர் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். சுமார் 70 ஆண்டுகளாக சினிமாவைப் பார்த்துள்ளார். அவர் எனக்கு மிகவும் பிடித்த பாடகிகளில் ஒருவர். அவர் இப்படி சொன்னது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது" என்றார் ரஹ்மான். 


ஏ.ஆர். ரஹ்மானின் '99 சாங்க்ஸ்' படத்தை விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இஹான் பட் மற்றும் எடில்ஸி வர்காஸ் ஆகியோர் முக்கிய ஜோடியாக இதில் நடித்துள்ளனர், மநீஷா கொய்ராலா, லிசா ரே, ரஞ்சித் பரோட் மற்றும் ராகுல் ராம் ஆகியோரும் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். தனது கனவைப் பின்தொடரும் ஒரு பாடகரையும் அவரைப் பின்தொடரும் உண்மையான காதலையும் சுற்றி அமைந்துள்ளது இப்படத்தின் கதைக்களம்.


ALSO READ: முகநூல் பதிவு மூலம் மனைவிக்கு அஞ்சலி, மக்களுக்கு பாடம்: இயக்குனரை புகழும் இணைய வாசிகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR