பரபரப்பு அறிக்கை, ரசிகர்களிடம் கார்த்தி அன்புப் பரிசு வேண்டுகோள்

நடிகர் கார்த்தி தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு தன் ரசிகர்களுக்கு அன்புப் பரிசு கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

Written by - ZEE Bureau | Last Updated : May 25, 2021, 01:49 PM IST
பரபரப்பு அறிக்கை, ரசிகர்களிடம் கார்த்தி அன்புப் பரிசு வேண்டுகோள்

அமீர் இயக்கிய பருத்தி வீரன், படத்தின் மூலம் மூலம் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்துள்ளார். இன்று 44-வது பிறந்தநாளைக் கொண்டாடும் கார்த்தி, ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்., 

அன்புத் தம்பிகள் அனைவருக்கும் வணக்கம்! இந்த கொரோனா (Coronavirus) சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவுக்கு மிகக் கடுமையாக உள்ளது! அரசாங்கமும், மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள, 'மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்தல், தனி மனித இடைவெளியைக் கடைபிடித்தல், வசிப்பிடத்தை விட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி; தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்'. இதுவே இந்தப் பிறந்தநாளுக்கு எனக்கு நீங்கள் தரும் பரிசாக இருக்கும்!” என்று நடிகர் கார்த்தி  (Karthi) தெரிவித்துள்ளார்.

ALSO READ | முதல்வர் பதவியேற்க இருக்கும் ஸ்டாலினுக்கு மாஸ் நடிகர் வேண்டுகோள்!

 

 

கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியாகி வெற்றி பெற்ற படம் சுல்தான். அந்த படத்தை பார்த்த அனைவரும் கார்த்தியின் நடிப்பை பாராட்டினார்கள். தற்போது அவர் இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வனில் நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News