Latest Movie Review of Kollywood: அருள்நிதி நடித்துள்ள படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் பாரதிராஜா, அருள்நிதி நடித்துள்ள திருவின் குரல் படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தில் ட்ரெய்லர் வெளியானதில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. அருள்நிதிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார், மேலும் சுபத்ரா ராபர்ட், மோனிகா சிவா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார், லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாய் பேச முடியாத அருள்நிதி தனது அப்பா பாரதிராஜா உடன் கன்ஸ்ட்ரக்சன் வேலையை கவனித்து வருகிறார். அருள்நிதிக்கு சில மாதங்களில் தனது அத்தை மகளான ஆத்மிகாவுடன் திருமணம் நடைபெற உள்ளது.  இந்த சமயத்தில் பாரதிராஜாவிற்கு தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.  மருத்துவமனை ஊழியர்களுக்கும் அருள்நிதிக்கும் ஏற்படும் பிரச்சனையால் பாரதிராஜாவுக்கு போலி மருந்தினை செலுத்தி விடுகின்றனர்.  இதற்குப் பின்பு பாரதிராஜாவுக்கு என்ன ஆனது? அவர் உயிர் பிழைத்தாரா இல்லையா? என்பது தான் திருவின் குரல் படத்தின் கதை.


மேலும் படிக்க: சொப்பன சுந்தரி படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!


வாய் பேச முடியாத, அருகில் இருந்து பேசினால் மட்டுமே கேட்கும் திறன் கொண்ட கதாபாத்திரத்தில் அருள்நிதி சிறப்பாக நடித்துள்ளார்.  ஒரு கோபக்கார இளைஞனாக வார்த்தையால் பேச முடியாததை கண்களில் காட்டி அசத்தியுள்ளார்.  தனது வயதிற்கு ஏற்ற முத்துப்பாண்டி என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார் பாரதிராஜா.  சொல்லப்போனால் கதையே இவரை சுற்றி தான் நடக்கிறது.  பல இடங்களில் பாரதிராஜா தான் ஒரு சிறந்த நடிகன் என்பதையும் இந்த படத்தில் காண்பித்துள்ளார்.  கதாநாயகி ஆத்மிகாவிற்கு பெரிய முக்கியத்துவம் இல்லை என்றாலும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.


திருவின் குரல் ட்ரெய்லர் வெளியானதில் இருந்து இது ஒரு அரசு மருத்துவமனை சுற்றி நடக்கும் தில்லாலங்கடி வேலைகளை படமாக எடுத்துள்ளனர் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர், ஆனால் அதை கதையின் களமாக வைத்துக் கொண்டு வேறொரு கதையினை இப்படத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.  படம் முழுக்கவே சண்டை காட்சிகள் நன்றாகவே இருந்தது, அருள்நிதியும் அதனை சிறப்பாக கையாண்டு இருந்தார்.  சாம் எஸ் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை என்றாலும் பின்னணி இசையில் வழக்கம் போல அசத்தியுள்ளார். திரைக்கதை பெரிதாக எங்கும் போர் அடிக்காமல் இருந்தாலும், ஒரே இடத்தை சுற்றியே நடக்கும் படி உள்ளதால் ஆங்காங்கே தொய்வு ஏற்படுகிறது.  மேலும் படம் முழுக்கவே பல லாஜிக் கேள்விகளும் எழுகிறது.  திருவின் குரல் அதிகமாக கேட்கவில்லை!!


மேலும் படிக்க: நீயெல்லாம் நல்ல குடும்பத்துல தான் பொறந்தியா? நாறிய பிக்பாஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ