தமிழ் ராக்கர்ஸ் என்றால் யார்?... வெளியானது ட்ரெய்லர் - ரசிகர்கள் பாராட்டு
அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
கோலிவுட் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவருமே தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரைக் கேட்டாலே அலறுவார்கள். சில வருடங்களுக்கு முன்னர், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னர் அல்லது படம் வெளியான முதல் நாளை பல படங்கள் தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் வெளியாகின.
தொடர்ந்து அவ்வாறு நடக்க தொடங்கியது தமிழ் ராக்கர்ஸ் மீதான பிடி இறுகத் தொடங்கியது. ஆனாலும், தமிழ் ராக்கர்ஸ் என்றால் யார்,அதில் எத்தனை பேர் என்று இன்றுவரை தெரியவில்லை.
இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரில் ஈரம் படத்தின் இயக்குநர் அறிவழகம் வெப் சீரிஸ் இயக்கியுள்ளார். அருண் விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் இத்தொடரில், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம்பெருமாள் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏவிஎம் புரொடக்ஷன் இந்த வெப் சீரிஸை தயாரித்துள்ளது.
மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் படத்திற்கு நோட்டீஸ்: வரலாற்று உண்மைகளை மறைத்தாரா இயக்குனர்
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் இந்த வெப் தொடரானது சைபர் க்ரைம் குறித்தும், படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் கும்பலை பற்றியும் மையமாக வைத்து உருவாகியுள்ளது.
தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸின் ட்ரெய்லர் இன்று வெளியானது. திரைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் கும்பலை கதாநாயகன் எப்படி கண்டுபிடிக்கிறார் போன்ற காட்சிகள் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன.
மேலும் படிக்க | என்னது மோடியை கல்யாணம் பண்ண போறேனா?... நடிகையின் விளக்கம்
ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் அதனை அதிகளவு பகிர்ந்துவருகின்றனர். இந்தத் தொடரானது சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அம்பலமான ஆர்னால்டின் சொகுசு வாழ்க்கை பின்னணி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ