அம்பலமான ஆர்னால்டின் சொகுசு வாழ்க்கை பின்னணி

ஹாலிவுட் மெகா சூப்பர் ஸ்டார் அர்னால்டின் சொகுசு வாழ்க்கையின் பின்னணி வெளியாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 16, 2022, 04:16 PM IST
  • சொகுசாக வாழும் அர்னால்டு
  • 74 வயதிலும் கம்பீரமாக இருக்கிறார்
  • தினமும் கீரை ஜூஸ் சாப்பிடுகிறாராம்
அம்பலமான ஆர்னால்டின் சொகுசு வாழ்க்கை பின்னணி title=

ஹாலிவுட் மெகா சூப்பர் ஸ்டார் அர்னால்ட் 74 வயதிலும் சூப்பர் ஆக்டிவாக இருக்கிறார். டெர்மினேட்டர் படத்தின் மூலம் உலகப் புகழ்பெற்ற அவர், அவருடைய கட்டுமஸ்தான உடலுக்காகவும் பிட்னஸூக்காகவும் போற்றப்படுகிறார். இன்றளவும் பிட்னஸூக்கான முன்மாதிரியாக பலரும் அவரைத் தான் கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு பிட்னஸ் மீது அதீத அக்கறைக் கொண்டவர். உடலுக்கு என்ன தேவையறிந்து அதனை மட்டுமே செய்வதை வாடிக்கையாக அவர் வைத்திருப்பதால், ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார். 

மேலும் படிக்க | Soya Fiber: உடல் எடை குறைய வைக்கும் சோயாவின் புரோட்டின் மாயம்

பணம், பொருள் மற்றும் புகழைக் கடந்து ஒருவருக்கு ஆரோக்கியம் இருந்தால் எல்லையற்ற மகிழ்ச்சியுடன் இருப்பார். அதுவே மிகப்பெரிய சொத்தாகவும், சொகுசு வாழ்க்கையாகவும் பார்க்கப்படுகிறது. அந்தவகையில் பார்க்கும்போது அர்னால்டு மிக மிக சொகுசாக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். வயது 74 ஆனாலும், தினமும் காலை, மாலை உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். காய்கறி மற்றும் கீரை ஜூஸ்களையே அதிகம் உணவாக எடுத்துக் கொள்கிறார். இப்போது அவருடைய மிகப்பெரிய கவனமெல்லாம் உடல் எடை கூடாமல் இருக்கவும், எடை இழக்காமல் இருக்கவும் சரிவிகிதமான பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். 

ஜிம்முக்கு காலை மற்றும் மாலை தவறாமல் அட்னஸ் போட்டுவிடும் அர்னால்டு, மற்ற நேரங்களில் சைக்கிளிங் செல்வது உள்ளிட்ட விஷயங்களை வாடிக்கையாக வைத்திருக்கிறார். மாமிச உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிட்டாராம். பிடிக்காத உணவுகளை ருசிக்காகக்கூட சாப்பிடமாட்டாராம். உடலை உறுதி செய்தால் அக மகிழ்ச்சி தானாக இருக்கும் என்பது தான் அர்னால்டின் தாரக மந்திரமாம். இதுகுறித்து அவர் பேசும்போது, புரதம் நிறைந்த கீரை ஜூஸ்களை அதிகம் சாப்பிடுகிறேன். அதுவே என் உடலுக்கு போதுமானது மற்றும் ஆரோக்கியமானது. இதனைத் தவிர்த்து என்னை மிகவும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறேன். தேவையற்ற எண்ணங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்வதில்லை. அப்படியே பழகிவிட்டதால், வாழ்க்கை நலமாக சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.   

மேலும் படிக்க | இந்த பழக்கத்தினால் இதய நோய், பக்கவாதம் ஏற்படலாம்: அதிர்ச்சி ஆய்வு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News