ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் 'யானை'.  ஹரியின் வழக்கமான ஸ்டைலில் ஆக்சன் படமாக அதிக பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படத்தை ட்ரம்ஸ்டிக் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.  இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு, ராதிகா, அம்மு அபிராமி, ராஜேஷ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, போஸ் வெங்கட் மற்றும் புகழ் ஆகியோர் நடித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | பா.ரஞ்சித் இயக்கும் பாலிவுட் படத்தின் படப்பிடிப்பு எப்போது?


கடந்த விநாயகர் சதுர்த்தியன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் தலைப்பு வெளியானது.  இந்த திரைப்படம் அருண் விஜய்க்கு 33-வது படமென்பதால் அதனை குறிக்கும் விதமாக, போஸ்டர் வெளியான போது 33 பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் இந்த போஸ்டரை வெளியிட்டனர். காதல், துரோகம், நட்பு, பகை என்ற வசனத்துடன் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.  இதில் அருண் விஜயின் கெட்டப் ரசிகர்களை கவர்ந்தது.  


 



ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் வெளியான இப்படத்தின் பாடல் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.  கடந்த சில வருடங்களாக அருண் விஜய் நடிப்பில் வெளிவரும் படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருக்கிறது.  அந்த வகையில் இந்த படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில்  எதிர்பார்க்கப்படுகிறது.  இப்படத்தின் வெளியீட்டு தேதி எப்போது என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில் ரிலீஸ் தேதியை அறிவித்து இருக்கிறது.  கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் இந்த திரைப்படம் மே மாதம் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.


 



மேலும் படிக்க | 'வலிமை' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR